திருப்பூரில் பயங்கரம்.. அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து.. தரைமட்டமான 40 வீடுகள்!
Tirupur Gas Cylinder Blast : திருப்பூர் மாவட்டத்தில் அடுத்தடுத்து நான்கு கேஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேஸ் சிலிண்டர்கள் வெடித்ததில் 40க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அங்கிருந்தவர்கள் பகல் நேரம் என்பதால் வேலைக்கு சென்றதால், பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

திருப்பூர், ஜூலை 09 : திருப்பூர் மாவட்டத்தில் சிலிண்டர்கள் வெடித்ததில் (Tirupur Gas Cylinder Blast) 40க்கும் மேற்பட்ட தகர கொட்டடைகள் தடைமட்டம் ஆகின. அடுத்தடுத்து நான்கு சிலிண்டர்கள் வெடித்ததால், வீடுகள் அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. வீடுகளில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் கல்லூரி சாலை எம்ஜிஆர் நகர் பகுதியில் ஏராளமாக தகரக் கொட்டகைகள் உள்ளன. சாயாதேவி என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் இதுபோன்று தகரக் கொட்டகைகளை அமைத்து வாடகைக்கு விட்டுள்ளார். இந்த இடத்தில் வட மாநில தொழிலாளர்கள், பிற மாவட்டங்களைச் சேர்ந்த தங்கி பணியாற்றி வருகின்றனர். அங்கு தங்கி இருந்து பலரும் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், 2025 ஜூலை 09ஆம் தேதியான இன்று மதியம் 2.30 மணியளவில் திடீரென சிலிண்டர் வெடித்துள்ளது.
முதலில் ஒரு சிலிண்டர் வெடித்த நிலையில், தீ பற்றி எரிந்துள்ளது. இந்த தீ அருகில் இருக்கும் வீடுகளில் பரவி, அடுத்தடுத்து தொடர்ந்து 4 சிலிண்டர்கள் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அப்பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. இதில், அங்கிரந்து 40க்கும் மேற்பட்ட வீடுகள் தரை மட்டமாகின.
Also Read : பெரம்பலூரில் அசம்பாவிதம்: தேர் இதனால்தான் கவிழ்ந்தது… அறநிலையத் துறை
அடுத்தடுத்து சிலிண்டர்கள் வெடித்து விபத்து
அந்த தகர கொட்டைகளில் உள்ள அனைத்து பொருட்களும் சேதம் அடைந்துள்ளன. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசாரும், தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். இதனை அடுத்து, தீயணைப்புத் துறையினர் மூன்று வாகனங்களில் வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சிலிண்டர் வெடித்தபோது, அங்கு தொழிலாளர்கள் யாரும் இல்லை. இதனால், உயிர்சேதம் பெரிதும் தவிர்க்கப்பட்டது. பகல் நேரம் என்பதால் தொழிலாளர்கள் வேலைக்கு சென்றிருந்ததால், பெரும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டது. தொழிலாளர்களின் உடைமைகள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அனைத்து சேதம் அடைந்தன.
Also Read : ரயில் பள்ளி வேன் மீது மோதியது எப்படி..? யார் காரணம்..? காயமடைந்த வேன் டிரைவர் விளக்கம்!
ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ
துயரச் சம்பவமாக, நமது திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட வார்டு எண் 37, எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் எதிர்பாராத விதமாக சிலிண்டர்கள் வெடித்த விபத்தில்,
வட மாநிலத்தவர்கள் தங்கியிருந்த 40 க்கும் மேற்பட்ட தகர கொட்டகை வீடுகள் இடிந்து தரைமட்டமான சம்பவத்தை தொடர்ந்து,
உடனடியாக சம்பவ… pic.twitter.com/0S49OEaDpg
— Tiruppur Selvaraj (@Tupkselvaraj) July 9, 2025
மேலும், சம்பவ இடத்திற்கு திருப்பூர் எம்எல்ஏ செல்வராஜ் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். விபத்து குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டார். விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தொழிலாளர்கள் தற்காலிக தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.