ஜன.1ம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம்.. சென்னைவாசிகேள நோட் பண்ணிக்கோங்க…

change in the departure times of express trains: எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மற்றும் திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் நேரங்களில் எந்த மாற்றமும் இல்லை. எக்ஸ்பிரஸ் ரயில்களை தொடர்ந்து, மின்சார ரெயில் நேர அட்டவணையும் விரைவில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜன.1ம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம்.. சென்னைவாசிகேள நோட் பண்ணிக்கோங்க...

கோப்புப் புகைப்படம்

Updated On: 

29 Dec 2025 11:29 AM

 IST

சென்னை, டிசம்பர் 29: தமிழகத்தில் 2026 ஜனவரி 1ம் தேதி முதல் எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேர அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் தண்டவாள மேம்பாட்டு பணிகள் மற்றும் பல்வேறு வழித்தடங்களில் நடந்து வந்த மின்மயமாக்கல் பணிகளும் நிறைவு பெற்றுள்ளன. இதற்கிடையில் புதிய ரயில்கள், சிறப்பு ரயில்கள், நீட்டிப்பு செய்யப்பட்ட ரயில்கள் உள்ளிட்டவற்றின் விவரங்களுடன் புதிய ரயில்வே கால அட்டவணை 2026 ஜனவரி 1ஆம் தேதி அமலுக்கு வரும் என அறிவிக்கபட்டது.

இதையும் படிக்க: ஜனவரி 1 முதல் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் பயண நேரம் அதிகரிப்பு – பயணிகள் கடும் அதிருப்தி

NTES செயலியில் வெளியான அட்டவணை:

அதன்படி, இந்த அட்டவணை தேசிய ரயில்வே விசாரணை அமைப்பு என்ற செயலி (NTES) மூலமாகவும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய கால அட்டவணையில் பல்வேறு ரயில்களின் புறப்படும் நேரம், நீட்டிப்பு ரயில்கள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து மாற்றப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் நேரங்கள் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சென்னையில் இருந்து ரயில் நேர மாற்றம்:

  • சென்னை எழும்பூரில் இருந்து குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் – காலை 10.20க்கு பதிலாக 10.40க்கு புறப்படும்
  • நெல்லை எக்ஸ்பிரஸ் – இரவு 8.40க்கு பதிலாக 8.50க்கு புறப்படும்
  • சோழன் எக்ஸ்பிரஸ் (திருச்சி நோக்கி) – காலை 7.45க்கு பதிலாக 8.00க்கு புறப்படும்
  • பொதிகை எக்ஸ்பிரஸ் – இரவு 8.10க்கு பதிலாக 7.35க்கு முன்கூட்டியே புறப்படும்
  • ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் – இரவு 7.15க்கு பதிலாக 8.35க்கு புறப்படும்
  • வைகை எக்ஸ்பிரஸ் – மதியம் 1.45க்கு பதிலாக 1.15க்கு முன்கூட்டியே புறப்படும்
  • முத்துநகர் எக்ஸ்பிரஸ் (தூத்துக்குடி) – இரவு 7.30க்கு பதிலாக 7.15க்கு புறப்படும்
  • வந்தே பாரத் (நெல்லை) – மதியம் 2.45க்கு பதிலாக 3.05க்கு புறப்படும்

அதே நேரத்தில், எழும்பூரில் இருந்து கொல்லம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் மற்றும் திருச்செந்தூர் செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் நேரங்களில் எந்த மாற்றமும் இல்லை. எக்ஸ்பிரஸ் ரயில்களை தொடர்ந்து, மின்சார ரெயில் நேர அட்டவணையும் விரைவில் வெளியிடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க : தவெக போட்டியிடும் சின்னம் எது தெரியுமா? வெளியானது முக்கிய அப்டேட்…கட்சியினர் குஷி!

மறுமார்க்கப் பயண நேர மாற்றங்கள்:

  • நெல்லை எக்ஸ்பிரஸ் – இரவு 8.40க்கு பதிலாக 8.50க்கு புறப்படும்
  • சோழன் எக்ஸ்பிரஸ் (திருச்சி) – காலை 11 மணிக்கு பதிலாக மதியம் 12.10க்கு புறப்படும்
  • பொதிகை எக்ஸ்பிரஸ் (செங்கோட்டை) – மாலை 6.45க்கு பதிலாக 6.50க்கு புறப்படும்
  • ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் – மாலை 5.50க்கு பதிலாக 6.00க்கு புறப்படும்
  • முத்துநகர் எக்ஸ்பிரஸ் – இரவு 8.40க்கு பதிலாக 9.05க்கு புறப்படும்

குருவாயூர், வைகை, நெல்லை வந்தே பாரத் ரெயில்களின் மறுமார்க்க நேரங்களில் மாற்றமில்லை.

இன்று முதல் உயரும் ரயில் கட்டணம் - யாருக்கு பாதிப்பு?
டொரண்டோவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவர் பலி
இனி சம்பள அடிப்படையில் தேர்வு - அமெரிக்காவின் முடிவால் இந்தியர்களுக்கு அதிர்ச்சி
இனி ஆதாருடன் APAAR ஐடியும் கட்டாயம்.. CET தேர்வகர்களுக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவு