இல்லாத இந்தித் திணிப்பை எடுத்துக் காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டுச் சென்றாரா? முதல்வர் ஸ்டாலினை சாடிய அண்ணாமலை..

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “பொதுமக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான கடும் எதிர்ப்பு எழுகிறதோ அப்போதெல்லாம், அறிவாலயத்தில் உள்ள ஒரு பழைய தகரப் பெட்டியைத் திறந்து, இந்த இல்லாத இந்தித் திணிப்பை எடுத்துக்காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டுச் சென்றாரா?” என கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இல்லாத இந்தித் திணிப்பை எடுத்துக் காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டுச் சென்றாரா?  முதல்வர் ஸ்டாலினை சாடிய அண்ணாமலை..

கோப்பு புகைப்படம்

Updated On: 

04 Mar 2026 14:47 PM

 IST

சென்னை, மார்ச் 4, 2026: திருச்சியில் மண்டல ரயில்வே அலுவலக நுழைவாயிலில் தமிழ் பெயருக்கு பதிலாக ‘கர்த்தவ்ய துவார்’ என ஹிந்தியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ஹிந்தி திணிப்பு வெறியில் எல்லை மீறி சென்று கொண்டிருக்கிறது. பாஜக ‘மொழி ஒன்று, வரிவடிவம் மூன்று’ எனும் வகையில் ஹிந்தி பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான ஹிந்தி திணிப்பு செயலில் இறங்கியுள்ளது மத்திய பாஜக அரசு” என தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி:

இதற்கு பதிலளிக்கும் வகையில், பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அதில், “பொதுமக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான கடும் எதிர்ப்பு எழுகிறதோ அப்போதெல்லாம், அறிவாலயத்தில் உள்ள ஒரு பழைய தகரப் பெட்டியைத் திறந்து, இந்த இல்லாத இந்தித் திணிப்பை எடுத்துக்காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டுச் சென்றாரா?” என கடுமையாகத் தாக்கியுள்ளார்.

மேலும் படிக்க: எடப்பாடி தொகுதியில் 5 முறை வெற்றியை பதிவு செய்த கே.பழனிசாமி!

இது தொடர்பாக அவரது சமூக வலைதளப் பக்கத்தில், “எப்போதெல்லாம் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு, நீதிமன்றங்களில் கொட்டுவாங்கி, செய்யும் ஊழல்கள் வெளிவந்து, பொதுமக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிரான கடும் எதிர்ப்பு எழுகிறதோ, அப்போதெல்லாம் அறிவாலயத்தில் உள்ள ஒரு பழைய தகரப் பெட்டியைத் திறந்து, இந்த இல்லாத இந்தித் திணிப்பை எடுத்துக் காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டுச் சென்றாரா?

இந்த ஏமாற்று அரசியல் அவர் காலத்தோடு முடிந்து விட்டது. இனியும் இந்த புளித்துப் போன காமெடி செய்து கொண்டிருக்காமல், நீங்கள் ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து பெருகியிருக்கும் ஊழல், கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் புழக்கம் என உண்மையான மக்கள் பிரச்சினைகள் குறித்து எப்போது பேசப் போகிறீர்கள்?” என குறிப்பிட்டுள்ளார்.

இந்தித் திணிப்பை கொண்டு வந்த காங்கிரஸ் – தமிழிசை சௌந்தராஜன்:

அதேபோல், இதற்கு பதிலளிக்கும் வகையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியுள்ளார். சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழிசை சௌந்தர்ராஜன், “மத்திய அரசு எல்லா மொழிகளுக்கும் உரிய அங்கீகாரம் கொடுத்து கொண்டே இருக்கிறது. இந்தி திணித்த காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது.

மேலும் படிக்க: மக்களே உஷார் … தமிழகத்தில் வெப்பம் படிப்படியாக உயரும்

தனியார் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை கிடையாது என முதலில் அமைச்சர் அறிவிப்பாரா? திமுக அரசு தனது தோல்வியை மறைப்பதற்காக மொழிப் பிரச்சினையை எழுப்புகிறது. திமுகவினர் ஹிந்தியில் போஸ்டர் அச்சடித்தனர்; ஹிந்தியில் ஓட்டு கேட்டார்கள். முதலமைச்சர் பதட்டத்தில் இருக்கிறார்; அவர் மட்டுமல்ல, கூட்டணி கட்சியினரும் பதட்டத்தில் இருக்கிறார்கள்” என குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

Follow Us
Related Stories
TVK Exit Poll Result: ஆட்சி அதிகார கனவில் தவெக.. 40 தொகுதிகளே கை கொடுக்க வாய்ப்பு.. விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த கருத்துக் கணிப்பு!
NTK Exit Poll Results: 4 முதல் 5 சதவீத வாக்குகள் மட்டுமே நாம் தமிழருக்கு கிடைக்கும்? எத்தனை இடங்களில் வெற்றி கிடைக்கும்?
ADMK Exit Poll Result: வெளியான தேர்தல் கருத்துக்கணிப்பு.. ஆட்சியை கைப்பற்றுமா அதிமுக? எத்தனை சதவீத வாக்குகள் பெரும்?
DMK Exit Poll Results: 169 தொகுதிகளை எட்டி பிடிக்கும் திமுக.. 55% வாக்குகளை அசராமல் அடிக்கும்.. கருத்து கணிப்பில் தகவல்!
Tamil Nadu Election Exit Poll Result: தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. 2- ஆவது முறை அரியணை ஏறுகிறார் மு.க.ஸ்டாலின்!
புதுச்சேரியில் இருந்து 4.5 லிட்டர் மது கொண்டு வரலாமா? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி
ஹிமாச்சல் பிரதேசத்தின் மலைப்பகுதிகளை பாதுகாக்கும் உள்ளூர் தெய்வம்..
காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா 9வது இடம்..