பாம்பை கண்டால் இனி பயம் வேண்டாம்…வந்தாச்சு நாகம் செயலி…ஒரே கிளிக் தான்!

Nagam App Launched To Catch Snakes: குடியிருப்பு பகுதிகளில் புகும் விஷப் பாம்புகளை பிடிப்பதற்கு புதிதாக நாகம் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பொதுமக்கள் பாம்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம். அதன்படி, பாம்பு பிடிப்பவர் பாம்பை பத்திரமாக பிடித்து செல்வார்.

பாம்பை கண்டால் இனி பயம் வேண்டாம்...வந்தாச்சு நாகம் செயலி...ஒரே கிளிக் தான்!

பாம்பு பிடிப்பதற்காக நாகம் செயலி அறிமுகம்

Updated On: 

30 Dec 2025 13:37 PM

 IST

கோவை மாவட்டத்தில் நகரப் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் பாம்புகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அலுவலகங்கள், வீடுகள், கடைகள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாம்புகள் காணப்படுவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், கோவையில் இரு சக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த ஹெல்மெட்டுக்குள் நல்ல பாம்பு ஒன்று இருப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த நல்ல பாம்பை பத்திரமாக மீட்டு காட்டுப் பகுதிக்குள் விட்டனர். இதே போல கோவையில், கடந்த நவம்பர் மாதம் மட்டும் 600- க்கும் மேற்பட்ட பாம்புகள் மீட்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர். பாம்புகளை பிடிப்பதில் தீயணைப்பு வீரர்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கப்பட்டிருந்தாலும் விஷப் பாம்புகளை கையால்வதில் சற்று சிரமம் இருப்பதாக கூறப்படுகிறது.

வனத்துறை சார்பில் நாகம் செயலி அறிமுகம்

மேலும், பாம்பு பிடிப்பதற்காக அவர்கள் பயன்படுத்தும் கருவிகள் சில நேரங்களில் பாம்புகளுக்கு காயத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. எனவே, இந்த நடைமுறை சிக்கலை தீர்க்கும் வகையில் வனத்துறை சார்பில் “Naagam” (Networked Alerts and Geographic Aid for Animal Management) என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களில் பாம்புகளை கண்டால் இந்த செயலி மூலம் தகவல் அனுப்பலாம்.

மேலும் படிக்க: Viral Video : நோயாளியை மிக கடுமையாக தாக்கிய மருத்துவர்.. அதிர்வலைகளை ஏற்படுத்திய வீடியோ!

சான்றளிக்கப்பட்ட பாம்பு பிடி வீரர்

அதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு அருகில் உள்ள சான்றளிக்கப்பட்ட மற்றும் பயிற்சி பெற்ற பாம்பு பிடி வீரர்கள் வந்து பாம்பை பிடித்து செல்வார்கள். அவர்கள் பிடிக்கும் அந்த பாம்புகளை வனப் பகுதி அல்லது மனிதர்கள் நடமாட்டம் இல்லாத இடங்களில் பாதுகாப்பாக விடுவார்கள். தற்போது, இந்த செயலி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு முழுமையாக கொண்டு வரப்படவில்லை. இந்த செயலி முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பிறகு, அனைத்து பகுதிகளிலும் உள்ள பாம்புகள் நடமாட்டம் குறித்து இந்த செயலியில் பதிவாகும்.

பாம்பு பிடிப்பவர்களின் பாதுகாப்பு உறுதி

இந்த பதிவுகள் அனைத்தும் சுற்றுச்சூழல் கண்காணிப்புக்கு பயன்படும். இந்த செயலி மூலம் பாம்புகளின் இனங்களை அடையாளம் காண உதவும் தகவல்களும் வழங்கப்படும் என்பதால் தேவையில்லாத பயம் குறையும் என்று நம்பப்படுகிறது. இது மட்டும் இன்றி பாம்பு பிடிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாம்புகளால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கவும் வனத்துறை பயிற்சி அளித்து வருகிறது.

பாம்பு பிடி வீரர்களுக்கு ஒரு நாள் பயிற்சி

அந்த வகையில், கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பாம்பு பிடிப்பவர்களுக்கு அண்மையில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், கோவையை சேர்ந்த 70 பேர் நாகம் செயலியில் பதிவு செய்யப்பட்டவர்களாவர். இதேபோல, சென்னை கிண்டி குழந்தைகள் பூங்காவில் தொழில்நுட்ப பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில், பாம்பு பிடிப்பவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: சென்னை செண்ட்ரல் – விமான நிலையம் ரயில் சேவை ரத்து.. மாற்று வழி பயன்படுத்த மெட்ரோ ரயில் தரப்பில் அறிவுறுத்தல்..

இன்று முதல் உயரும் ரயில் கட்டணம் - யாருக்கு பாதிப்பு?
டொரண்டோவில் நடந்த துப்பாக்கி சூட்டில் இந்திய மாணவர் பலி
இனி சம்பள அடிப்படையில் தேர்வு - அமெரிக்காவின் முடிவால் இந்தியர்களுக்கு அதிர்ச்சி
இனி ஆதாருடன் APAAR ஐடியும் கட்டாயம்.. CET தேர்வகர்களுக்கு மகாராஷ்டிரா அரசு உத்தரவு