Fake Currency: யூட்யூப் பார்த்து சம்பவம்.. கள்ள நோட்டுகள் அச்சடித்த இளைஞர்!
Tenkasi Crime News: தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த மணிகண்ட பிரபு என்பவர் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து கள்ள நோட்டுகள் அச்சடித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். பி.ஏ பட்டதாரியான இவர், ஆன்லைனில் வாங்கிய கலர் ஜெராக்ஸ் இயந்திரத்தைப் பயன்படுத்தி ₹500 மற்றும் ₹200 நோட்டுகளை அச்சடித்துள்ளார்.

மணிகண்ட பிரபு
தென்காசி, செப்டம்பர் 7: யூட்யூப் பார்த்து கள்ள நோட்டுகள் அச்சடித்ததாக தென்காசி மாவட்டத்தில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பங்கள் வளர்ந்து விட்ட பிறகு அதனை நல்லதுக்கு பயன்படுத்துவதைக் காட்டிலும் தவறான விஷயங்களுக்கு சிலர் தொடர்ச்சியாக பயன்படுத்தி வருகின்றனர். அப்படியான ஒரு திடுக்கிடும் சம்பவம் தென்காசி மாவட்டத்தை அலற வைத்துள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அழகாபுரி பட்டணம் இன்று கிராமம் உள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த மணிகண்ட பிரபு தனது வீட்டில் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து புழக்கத்தில் விடுவதாக ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் மணிகண்ட பிரபு வீட்டிற்கு தனிப்பிரிவு போலீசார் சென்று சோதனை நடத்தினர்.
ரகசிய அறையில் கள்ள நோட்டுகள்
அப்போது அங்கு ஒரு அறையில் கள்ள ரூபாய் நோட்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் அதற்கு கலர் ஜெராக்ஸ் இயந்திரம் பயன்படுத்தப்பட்டதும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மணிகண்ட பிரபுவை பிடித்த ஆலங்குளம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் பல்வேறு அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியானது .
இதையும் படிங்க: மகனுக்கு பிறந்தநாள் பரிசு வழங்குவதில் வாக்குவாதம்.. மனைவி, மாமியார் கத்தரிக்கோலால் குத்தி கொலை
அதாவது 26 வயதான மணிகண்ட பிரபு ஒரு பிஏ பட்டதாரி ஆவார். இவர் கல்லூரி படிப்பை முடித்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக ஆன்லைன் மூலம் கலர் ஜெராக்ஸ் இயந்திரத்தை ஆர்டர் செய்து வாங்கி உள்ளார். அதில் பிரிண்ட் அவுட் எடுப்பது தொடர்பான பணிகளை பகுதி நேரமாக செய்து கொண்டிருக்கிறார். அதே சமயம் தென்காசியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்த மணிகண்ட பிரபு வேலை இல்லாத நேரங்களில் தனது செல்போனில் யூடியூப் வீடியோக்களை பார்த்து வந்துள்ளார்.
யூட்யூப் பார்த்து தயாரிப்பு
இப்படித்தான் தனது அறையில் இருந்த ஜெராக்ஸ் இயந்திரத்தில் 500 மற்றும் 200 ரூபாய் நோட்டுக்களை அப்படியே ஸ்கேன் செய்து கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ள ரூபாய் நோட்டுகளாக புழக்கத்தில் விட்டு வந்துள்ளார். இவர் தனது கள்ள நோட்டுகளை மெடிக்கல் மற்றும் டீக்கடை போன்ற கடைகளில் அதிகமாக புழக்கத்தில் விட்டது தெரிய வந்தது. இதற்கு துணையாக அதே பகுதியில் செய்த நான்கு பேர் இருந்துள்ளனர்.
இதையும் படிங்க: போலி உதவி கலெக்டர்.. வங்கி அதிகாரியை ஏமாற்றி திருமணம் செய்த பெண்.. திருமணத்திற்கு பிற்கு வெளிவந்த உண்மை!
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து ஆலங்குளம் போலீசார் மணிகண்டன் போய் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். மணிகண்ட பிரபுவின் வீட்டில் இருந்து கள்ள ரூபாய் நோட்டுகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட கலர் ஜெராக்ஸ் இயந்திரம், பிரிண்ட் அவுட், பேப்பர்கள், கலர் ஜெராக்ஸ் மூலம் தயாரிக்கப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றை போலீசார் கைது செய்தனர். மேலும் அவருடன் தொடர்பில் இருந்த நான்கு பேரையும் கைது செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.