ஆயுத பூஜைக்கு ஊருக்கு போறீங்களா? சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம்.. எங்கெங்கு?

Chennai EMU Train : ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு, பொதுமக்கள் கிளாம்பாக்கம் செல்லும் வகையில், தாம்பரம் - கூடுவாஞ்சேரி இடையே சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரத்தில் இருந்து 2025 செப்டம்பர் 30ஆம் தேதியான இன்று இரவு மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

ஆயுத பூஜைக்கு ஊருக்கு போறீங்களா? சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம்.. எங்கெங்கு?

மின்சார ரயில்கள்

Updated On: 

30 Sep 2025 06:43 AM

 IST

சென்னை, செப்டம்பர் 30 : காலாண்டு விடுமுறை, ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு, சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது, 2025 அக்டோபர் 1ஆம் தேதியான நாளை ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப்படி நாளை (அக்டோப்ர 1) மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது மின்சார ரயில்கள். மின்சார ரயில்களில் தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். குறிப்பாக தொடர் விடுமுறை, பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் மின்சார ரயில்கள் மூலம் கிளாம்பாக்கத்திற்கு செல்கின்றனர்.  பேருந்தை காட்டிலும் மின்சார ரயில்களில் சீக்கிரம் செல்ல முடியும் என்பதால் பயணிகள் கிளாம்பாக்கத்திற்கு மின்சார ரயில்களில் செல்கின்றனர்.

இந்த நிலையில், காலாண்டு விடுமுறை, 2025 அக்டோபர் 1ஆம் தேதி ஆயுத பூஜை, அக்டோபர் 2ஆம் தேதி விஜயதசமி என தொடர் விடுமுறை வருகிறது. இதனால், மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனை கருத்தில் தெற்கு ரயில்வே சிறப்பு மின்சார ரயில்களை அறிவித்துள்ளது.  அதாவது, 2025  அக்டோபர் 1ஆம் தேதியான நாளை  ஞாயிற்றுக் கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதே நேரத்தில், 3 சிறப்பு மின்சார ரயில்களையும்  இயக்குவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Also Read : ஆயுத பூஜை விடுமுறை… – முன்பதிவில்லாத 2 ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு – எப்போது தெரியுமா?

சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கம்

பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க, 2025 செப்டம்பர் 30ஆம் தேதியான இன்று மூன்று சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து கிளாம்பாக்கம் செல்லும் வகையில், தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு மூன்று சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தாம்பரத்தில் இருந்து இரவு 7.42, 7.53, 8.10 மணிக்கு கூடுவாஞ்சேரிக்கு புறப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : நெருங்கும் தீபாவளி பண்டிகை.. ரயில் பயணிகளுக்கு கடும் எச்சரிக்கை!

மேலும், 2025 செப்டம்பர் 30ஆம் தேதியான இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து செங்கோட்டை வரை இயக்கப்பட இருந்த சிறப்பு ரயில்கள் தற்போது கோட்டயம் வரை நீடித்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 1, 8, 15 மற்றும் 22ஆம் தேதிகளில் பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.05 மணிக்கு கோட்டயம் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் கோட்டயத்தில் இருந்து அக்டோபர் 2, 9, 16 மற்றும் 23ஆம் தேதிகளில் பிற்பகல் 2.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்ட்ரல் சென்றடைகிறது.