பழுது காரணமாக மேல் தளத்தில் மோதிய லிஃப்ட் – பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் பலி – சென்னையின் பிரபல திரையரங்கில் அதிர்ச்சி சம்பவம்
Tragic Incident: சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் உள்ள திரையரங்கில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ராஜேஷ் ஹைட்ராலிக் லிஃப்ட்டில் ஏற்பட்ட பழுது காரணமாக விபத்தில் ஏற்பட்டு உயிரிழந்தார். விபத்தில் ஊழியர் ராஜேஷ் உயிரிழந்தது குறித்து அந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

லிஃப்ட் விபத்தில் பலியான ராஜேஷ்
சென்னை, செப்டம்பர் 23: சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் உள்ள திரையரங்கில் செப்டம்பர் 22 அன்று நள்ளிரவு புரொஜெக்டர் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர், ஹைட்ராலிக் லிஃபிடில் ஏற்பட்ட பழுது காரணமாக உயிரிழந்தார். திரையரங்கின் (Theatre) புரொஜெக்ரில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென ஹைட்ராலிக் இயந்திரம் மேல் நோக்கி சென்றதால் கட்டிடத்தின் மேல் தளத்தில் மோதி பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்த ஊழியர் உயரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹட்ராலிக் லிஃப்டில் ஏற்பட்ட பழுது காரணமாக ஊழியர் பலி
சென்னை பெரம்பூரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் ராயபேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் உள்ள திரையரங்கில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். திரையரங்கின் 25 அடி உயர ஸ்கீரின் அருகே ஹைட்ராலிக் லிஃப்டில் நின்று பணி செய்து கொண்டிருந்த போது லிஃப்ட் பழுதாகி, வேகமாக மேல் நோக்கி சென்றது. இந்த விபத்தில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து ராயபேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிக்க : பணம் கொடுக்கல் -வாங்கல் தகராறு.. பாரில் ஒருவர் கொலை!
திரையரங்கில் உள்ள ஹைட்ராலிக் லிஃப்டை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பராமரிப்பு பணிகள் செய்யப்படும். அப்படி பராமரிப்பு பணியில் ராஜேஷ் உடப்ட 4 பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் லிஃப்ட் பழுது காரணமாக வேகமாக மேல் நோக்கி செல்ல மற்ற ஊழியர்கள் மூன்று பேரும் லிஃப்டில் இருந்து குதித்து உயிர் பிழைத்திருக்கின்றனர். இந்த சம்பவத்தில் ராஜேஷ் குதிப்பதற்குள் லிஃப்ட் மேல்நோக்கி சென்று இடித்து உயிரிழந்திருக்கிறார். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிக்க : ஓசூரில் அதிர்ச்சி சம்பவம்.. காப்பகத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 5 பேர் கைது!
இதே போல கடந்த மார்ச், 2025ல் சென்னை தேனாம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்று வந்த லிஃப்ட் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்து. இந்த நிலையில் ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது லிஃப்ட் அறுந்து கீழே இழுந்ததாக கூறப்படுகிறது. இதில் ஊழியர் ஒருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். தினமும் அந்த ஹோட்டலுக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் வருகை தரும் நிலையில் லிஃப்ட் பழுதடைந்து ஊழியர் பலியான ம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.