நாளை வெளியாகும் தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் – செய்தியாளர்களை சந்திக்கும் தேர்தல் ஆணையம்
Election Commission : இந்திய தேர்தல் ஆணையம் அக்டோபர் 27, 2025 அன்று செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து சார் எனப்படும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் வாக்களார் திருத்தப் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
நாடு முழுவதும் நடைபெறவுள்ள சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பட்டியல் (Special Intensive Revision – SIR) அறிவிப்பு குறித்து அக்டோபர் 27, 2025 அன்று மாலை 4:15 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் (Election Commission) தகவல் வெளியிட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டு வாக்காளர் திருத்தப் பட்டியல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 10 முதல் 15 மாநிலங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்படவிருக்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் இந்த திருத்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சிறப்பு வாக்காளர் பட்டியல் அறிவிப்பு குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
செய்தியாளர்களை சந்திக்கும் தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம் வருகிற அக்டோபர் 27, 2025 அன்று மாலை டெல்லியில் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையல் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில் சிறப்பு வாக்காளர் திருத்த பட்டியல் வெளியிடப்படும் நாள், எந்த மாநிலங்களுக்கான பட்டியல் வெளியிடப்படும் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் வெளியாகும் என அறிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : 2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.. எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் – நயினார் நாகேந்திரன்..
தற்போது வெளயான தகவலின் படி, தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகியவை உள்ளடக்கிய 10 முதல் 15 மாநிலங்களுக்கான பட்டியல் வெளியிடப்படும் என கருதப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவிருக்கின்றன.
எதற்காக இந்த மாற்றம்?
வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் அதிரடியாக திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. எதிர்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தேர்தல் ஆணையம் இதற்கு விளக்கமளித்துள்ளது.
-
வாக்காளர் பட்டியலில் உள்ள தவறுகளை சரிசெய்தல்
-
இடமாற்றம், இறந்தவர்களின் பெயர், இரண்டு முறை வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் போன்றவற்றை நீக்குதல்
-
புதிய வாக்காளர்களை அடையாள ஆவணங்களின் அடிப்படையில் சரியாக பதிவு செய்தல்
-
பிறந்த இடம் உள்ளிட்ட தரவுகள் மூலம் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கண்டறிதல்
இந்த நடவடிக்கை, பல மாநிலங்களில் நடைபெற்று வரும் குடியுரிமை தொடர்பான பின்னணியில் முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க : நெருங்கும் பீகார் சட்டமன்ற தேர்தல்.. பாஜகவிற்கு 101 இடங்கள்.. நிறைவடைந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை..
பீகார் மாநிலத்தில் சமீபத்தில் தனது வாக்காளர் பட்டியலை புதுப்பித்து 7.42 கோடி பெயர்கள் கொண்ட இறுதி பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்த மாநிலத்தில் தேர்தல் நவம்பர் 6, 2025 மற்றும் நவம்பர் 11, 2025 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 2026 ஆம் ஆண்டு தேர்தல் நடைபெருக்கும் நிலையில் தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.