மதுபோதையில் மூன்றாவது மாடியில் தூங்கிய இளைஞர்.. நிலை தடுமாறி கீழே விழுந்து பலியான சோகம்!

Young Man Fell From Third Floor | சென்னையில் உள்ல விடுதி ஒன்றில் தங்கி வேலை செய்து வந்த 23 வயது இளைஞர் மது அருந்திவிட்டு மூன்றாவது மாடியில் படுத்து தூங்கிய நிலையில், நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

மதுபோதையில் மூன்றாவது மாடியில் தூங்கிய இளைஞர்.. நிலை தடுமாறி கீழே விழுந்து பலியான சோகம்!

மாதிரி புகைப்படம்

Updated On: 

13 Sep 2025 08:57 AM

 IST

சென்னை, செப்டம்பர் 13 : சென்னையில் (Chennai) மாடியில் படுத்து தூங்கிய இளைஞர் மூன்றாவது மாடியில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில், பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அந்த இளைஞர் இரவு குடித்துவிட்டி மதுபோதையில் உறங்கிய நிலையில், காலையில் சிறுநீர் கழிக்க எழுந்துச் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இளைஞரின் மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக பலியான இளைஞர்

சிவகங்கை மாவட்டம், மருதாங்குடியை சேர்ந்தவர் ஜெபடெல்பன். 23 வயதான இவர் சென்னை சூளைமேடு அப்பாசாமி தெருவில் உள்ள விடுதியில் தங்கி, மெட்ரோ ரயில் பணியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். டெல்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதன் காரணமாக வேலை முடித்து வரும் போது சில நாட்கள் மது அருந்திவிட்டு விடுதிக்கு வருவதை வழக்கமாக கொண்டு இருந்துள்ளார். இந்த நிலையில், செப்டம்பர் 11, 2025 அன்று வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய அவர் வழக்கம் போல மது அருந்திவிட்டு வந்துள்ளார்.

இதையும் படிங்க : Koyembedu: கோயம்பேட்டில் அரசு பேருந்து திருட்டு.. ஆந்திராவில் மீட்ட போலீசார்!

மது போதையில் படுத்திருந்த இளைஞருக்கு காத்திருந்த மரணம்

வீட்டுக்கு சென்ற அவர், மூன்றாவது மாடிக்கு சென்று தனது நண்பர்களுடன் தண்ணீர் தொட்டியின் மீது படுத்து தூங்கியுள்ளார். இந்த நிலையில், அடுத்த நாள் காலை அதாவது செப்டம்பர் 12, 2025 காலையில் சிறுநீர் கழிக்க எழுந்த டெல்பன் நிலை தடுமாறி மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க : நீ எனக்கு வேணும்.. கல்லூரி மாணவிக்கு காதல் வலை வீசிய பேராசிரியர்!

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாடியில் தூங்கிய இளைஞர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.