“காமராஜர் என அழைக்க வேண்டாம்” கறாராக சொன்ன தவெக தலைவர் விஜய்!
TVK Vijay : தன்னை இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம் எனவும், 2026 சட்டப்பேரவை தேர்தலை பற்றி இங்கு பேச வேண்டும் எனவும் மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவுரை வழங்கி உள்ளார். மேலும், பள்ளி பற்றியும், ஆசிரியர்கள் பற்றியும் பேசுங்கள் எனவும் கூறியிருக்கிறார்.

சென்னை, ஜூன் 13 : தன்னை இளைய காமராஜர் என அழைக்க வேண்டாம் எனவும், 2026 சட்டப்பேரவை தேர்தலை பற்றி பேச வேண்டாம் எனவும் தமிழக வெற்றிக் கழக தலைவர் (Tamilaga Vettri Kazhagam Chief Vijay) விஜய் அறிவுறுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் மூன்றாம் கட்ட கல்வி விருது விழா சென்னையில் நடந்து வருகிறது. 10,12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கவுரவித்து வருகிறார். இதுவரை இரண்டு கட்டங்களாக பாராட்டு விழா நடந்த நிலையில், 2025 ஜூன் 13ஆம் தேதியான இன்று மூன்றாம் கட்டமாக பாராட்டு விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் கலந்து கொண்ட விஜய் மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். மேலும், அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிரழந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்.
“காமராஜர் என அழைக்க வேண்டாம்”
தொடர்ந்து, மூன்றாம் கட்ட கல்வி விருது விழாவில், மேடையில் பேசிய தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், “ஒரு சிறிய வேண்டுகோளாக பேச்சை குறைத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன். காமராஜர் அல்லது இளைய காமராஜர் என தன்னை அழைக்க வேண்டாம்.




2026 சட்டப்பேரவை தேர்தல் பற்றியும் இங்கு பேச வேண்டாம். அதற்கு பதிலாக உங்கள் பள்ளி மற்றும் ஆசிரியர்களை பற்றி பேசுங்கள். அனைவரையும் தனித்தனியே சந்திக்கிறேன். ஆனால், பேச்சை மட்டும் குறைத்துக் கொள்ள வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக, அகமதாபாத் விபத்து குறித்து பேசிய விஜய், ”குஜராத்தில் நடைபெற்ற விமான விபத்தால் மனம் பதறுகிறது. இது சம்பந்தமான புகைப்படங்கள் வீடியோக்களை பார்க்கையில் மனதே பதறுகிறது. அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை.
விஜய் பேச்சு
மேன்மக்கள் என்றும் மேன் மக்களே ❤️🤗
pic.twitter.com/djGdD171cf— தமிழக வெற்றிக் கழகம் IT WING (@Tvk_ITWING_) June 13, 2025
எனவே இந்த நேரத்தில் இறந்தவர்களுக்காக இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என நினைக்கிறேன்” என்றார். தொடர்ந்து, அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிரழந்தவர்களுக்கு இரண்டு நிமிடம் விஜய் மௌன அஞ்சலி செலுத்தினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் 10,12ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்து வருகிறார். அப்போது, மேடையில் பேசும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விஜயை இளைய காமராஜர் என்றும் 2026 தேர்தல் பற்றியும் பேசி வருகின்றனர். மேடையில் நீண்ட நேரம் தேர்தல் பற்றி பேசி வரும் நிலையில், விஜய் தற்போது அதனை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.