இறுதியாகாத கூட்டணி.. தேர்தல் அறிக்கையிலும் தாமதம்.. கனிமொழி கொடுத்த விளக்கம்!!

DMKs election manifesto: பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் வந்திருந்தனர். அவர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இந்தக் கருத்துக்களின் அடிப்படையில், தேர்தல் அறிக்கையில் எவற்றைச் சேர்க்கலாம் என்பது குறித்து நாங்கள் பரிசீலிப்போம். முதலமைச்சரின் ஒப்புதலுடன், அது தேர்தல் அறிக்கையாகத் தயாரிக்கப்படும் என்றார்.

இறுதியாகாத கூட்டணி.. தேர்தல் அறிக்கையிலும் தாமதம்.. கனிமொழி கொடுத்த விளக்கம்!!

கோப்புப் புகைப்படம்

Updated On: 

05 Feb 2026 07:12 AM

 IST

சென்னை, பிப்ரவரி 05: தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கை வரைவுக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நேற்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு குழுவின் தலைவரான எம்.பி கனிமொழி தலைமை தாங்கினார். திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், அமைச்சர்கள் கோவிந்த். செழியன், டி.ஆர்.பி. ராஜா, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் எம்.எம். அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எழிலன் நாகநாதன், ஏ. தமிழரசி ரவிக்குமார், ஜி. சந்தானம், சுரேஷ் சம்பந்தம் உள்ளிட்ட ஏராளமானோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

மேலும் படிக்க: துணைவேந்தர் நியமன வழக்கு – தமிழக அரசுக்கு ஆதரவாக வந்த தீர்ப்பு – என்ன நடந்தது?

முக்கிய அமைப்புகளிடம் கருத்து கேட்பு:

இதில், தமிழ்நாடு அருந்ததியர் முன்னேற்றப் பேரவை, ஆதி திராவிடர் மகாஜன சபை, அனைத்து முதலியார் வெள்ளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு, இளைஞர் படகர் சங்கம், மக்கள் மறுமலர்ச்சிக் கழகம், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகம் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், மீனவர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் தங்களது கோரிக்கைகளைத் தெரிவித்து மனுக்களை அளித்தனர்.

மிக விரைவில் தேர்தல் அறிக்கை:

இந்த கூட்டம் முடிந்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி கூறியதாவது, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் வந்திருந்தனர். அவர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இந்தக் கருத்துக்களின் அடிப்படையில், தேர்தல் அறிக்கையில் எவற்றைச் சேர்க்கலாம் என்பது குறித்து நாங்கள் பரிசீலிப்போம். முதலமைச்சரின் ஒப்புதலுடன், அது தேர்தல் அறிக்கையாகத் தயாரிக்கப்படும். தேர்தல் அறிக்கை மிக விரைவில் வெளியிடப்படும்.

மேலும் படிக்க: ஜெயலலிதாவை ரோல் மாடல் என்கிறார்… அப்போ யார் ஊழல் சக்தி? விஜய்யிடம் எடப்பாடி பழனிசாமி கேள்வி

தொகுதி எண்ணிக்கை குறித்து பேசவில்லை:

கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்தால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார். காங்கிரஸ் மற்றும் பிற கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. தொகுதிகளின் எண்ணிக்கையை பேச்சுவார்த்தைக் குழு முடிவு செய்யும். நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. இவ்வாறு அவர் கூறினார்.

Follow Us
Related Stories
சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த விமான முனையம்… எப்போது திறக்கப்படும்… வெளியான முக்கிய தகவல்!
யாருக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு?.. திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் இன்று அறிவிப்பு!!
சென்னையில் ஓப்பன் டாப் பேருந்து திட்டத்துக்கு கைவிரிப்பு.. சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி.. என்ன காரணம்!
சென்னை டூ கேரளம் பருந்து போல பறக்கலாம்.. வருகிறது புல்லட் ரயில் சேவை… திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி கேட்பு!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை.. எங்கெல்லாம் தெரியுமா..? வானிலை நிலவரம் இதோ..
Poonamalle Constituency Election 2026: வேகமான நகர்புற வளர்ச்சியை காணும் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி.. வெற்றி யாருக்கு?
ஏப்ரல் 1 முதல் பான் கார்டு விதிகளில் வரவிருக்கும் மாற்றம்
தாய், மகளைக் கடித்து குதறிய வளர்ப்பு நாய்.. வேடிக்கை பார்த்த உரிமையாளர்கள்..
ஏப்ரல் 1 முதல் உங்கள் சம்பளம் மாறப்போகிறது!.. புதிய விதிகள், வரி மாற்றங்கள்..
இனி இரவிலும் சூரிய ஒளியை பெறலாம்.. விண்வெளியில் கண்ணாடி அமைக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனம்..