100 நாள் வேலை திட்டத்தில் திமுக ஊழல் செய்ய முடியாது…நயினார் நாகேந்திரன்!
DMK Cannot Commit Corruption In 100 Day Work Plan: மத்திய அரசின் நூறு நாள் வேலை திட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஊழல் செய்ய முடியாது என்று பா ஜ க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

100 நாள் வேலை திட்டத்தில் திமுக ஊழல் செய்ய முடியாது
இது தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியது உண்மையாகும். ஆனால், அதன் பிறகு வெளியான தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சு வார்த்தை உள்ளிட்ட தகவல்கள் அனுமானத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டதாகும். ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டணிக்கு வெளியே இருப்பதால், அவர்கள் குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது. தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கும் நிலையில், கடைசி நேரத்தில் கூட்டணி விவகாரம் வேறு மாதிரி மாறலாம். தமிழகத்தில் சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை.
திமுக ஆட்சியை ஏற்று கொள்ள முடியாத நிலை
மாணவ, மாணவிகள் மற்றும் மகளிருக்கு மாதம் ரூ. 1000 உதவித் தொகை வழங்கிவிட்டு அவர்களுக்கு கூடுதல் சுமைகளை அளிக்கும் இந்த திமுக ஆட்சியை மக்கள் ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உள்ளது. மக்களுக்கு எந்த விதமான திட்டங்களையும் அறிவிக்காமல் திமுக அரசு ஏமாற்றி வருகிறது. 100 நாள் வேலை திட்டத்தில் 125 நாளாக வேலை நாட்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்தை நிறுத்தி விட்டதாக திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க: விடுமுறை முடிந்ததும் படிப்பு.. பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே புத்தகங்கள்.. அதிரடி உத்தரவு!!
திமுகவினர் ஏன் தீபாவளிக்கு வாழ்த்து சொல்வதில்லை
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் திமுகவினர் தீபாவளி பண்டிகைக்கு எதற்காக வாழ்த்து கூற மறுக்கின்றனர். இது திமுகவின் போலி மதசார்பின்மையை பிரதிபலிக்கிறது. தமிழக வெற்றிக் கழகத்தில் பூத் பொறுப்பாளர்கள், கட்டமைப்பு இல்லாமல் உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக தேசிய ஜனநாயக ஆட்சி அமைய வேண்டும். இந்த கருத்துடைய கட்சிகள் கூட்டணி இணையலாம். அதிமுக – பாரதீய ஜனதா கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்துக்கு ரூ.14.85 ஆயிரம் கோடி நிதி
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கு திமுக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தற்போது, 100 நாள் வேலை திட்டத்தில் பணி புரியும் நபர்கள் பணிக்கு வருவதற்கு முன்பும், பணி முடிந்த பின்னரும் தங்களின் விரல் ரேகையே (பயோமெட்ரிக்) பதிவு செய்ய வேண்டும். இதனால், முன்பு இருந்ததை போல, தற்போது இந்த திட்டத்தில் ஊழல் செய்ய முடியாது என்ற வருத்தத்தில் திமுகவினர் உள்ளனர். கடந்த 11 ஆண்டு கால பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு ரூ. 14 லட்சத்து 85 ஆயிரம் கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நான்கு வழி சாலை, மேம்பாலங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: தமிழகத்தில் பறவை காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்.. கோழிப் பண்ணைகளை கண்காணிக்க உத்தரவு..