மெட்ரோவில் சத்தம் போட்டு பேசினால் ரூ.500 அபராதம்.. வெளியான முக்கிய அறிவிப்பு!
Chennai Metro Announced Fine | சென்னையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் மெட்ரோவில் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில், மெட்ரோவில் பயணம் செய்யும்போது சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஏப்ரல் 19 : சென்னையில் (Chennai) ஏராளமான பொதுமக்களின் பிரதான போக்குவரத்து சேவையாக மெட்ரோ ரயில்கள் (Metro Trains) உள்ளன. பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், அலுவககங்களுக்கு செல்பவர்கள் என பலருக்கும் முதன்மை தேர்வாக உள்ளது. இதன் காரணமாக ஒரு நாளுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்கின்றனர். இந்த நிலையில், மெட்ரோ பயணிகளுக்கு மெட்ரோ ரயில் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
மெட்ரோவில் சத்தம் போட்டு பேசினால் ரூ.500 அபராதம்
மெட்ரோ ரயிலில் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சத்தம் போட்டு பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம், மெட்ரோவில் சக பயணிகளுக்கு தொந்தரவு விளைவிப்பதோ அல்லது அவர்களின் வசதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதோ தண்டனைக்குரிய குற்றமாகும். குறிப்பாக, செல்போனில் சத்தமாக பேசுவது, ஹெட்போன் இல்லாமல் பாடல் அல்லது வீடியோக்களை பார்ப்பது, மெட்ரோ ரயிகளிலும், வளாகங்களிலும் ஒலிபெருக்கி வசதியை பயன்படுத்துவது ஆகியவை தண்டனைக்குரிய குற்றமாகும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இங்கெல்லாம் கோடை மழைக்கு வாய்ப்பு.. வெயிலுக்கு கொஞ்சம் ரெஸ்ட்.. வானிலை அப்டேட் இதோ
மெட்ரோ ரயில் வளாகத்தில் இருந்து வெளியேற்றப்படலாம்
மேற்குறிப்பிட்ட இந்த விதிகளை மீறும் பயணிகளுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் விதிகளை மீறும் பயணிகள் வளாகத்தில் இருந்து வெளியேற்றப்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே சக பயணிகளின் பயணச் சூழலை கருத்தில் கொண்டு அனைவரும் ஹெட்போன்களை பயன்படுத்த வேண்டும். மெட்ரோ ரயில் மற்றும் வளாகத்திற்குள் சத்தமாக பேசுவது போன்றவற்றை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மெட்ரோ நிர்வாகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.
இதையும் படிங்க : கடந்த 5 ஆண்டுகளில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் பலனை அனுபவிக்கிறார்கள் – பிரதமர் மோடி விமர்சனம்
அன்றாட வாழ்வில் இருக்கும் கடுமையான சூழல்களுக்கு மத்தியில் பயணம் செய்யும்போது சக பயணிகளின் செயல்கள் சற்று தொந்தரவாக இருந்து வந்த நிலையில், இந்த புதிய விதியின் மூலம் இடையூறு இல்லாமல் பயணம் செய்ய முடியும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.