பாளையங்கோட்டை: பழைய ரூ.100 நோட்டு செல்லுமா? செல்லாதா? ரேஷன் கடையில் வாங்க மறுப்பு
Palayankottai Ration Shop Dispute: பாளையங்கோட்டை கூட்டுறவு நியாயவிலை கடையில் பழைய 100 ரூபாய் நோட்டை ஏற்க மறுத்ததால் வாடிக்கையாளர் ரத்தினகுமார் தாக்கப்பட்டார். விற்பனையாளரின் தகாத வார்த்தைகள் மற்றும் பணத்தை முகத்தில் வீசிய செயல் கண்டனத்திற்குரியது. ரத்தினகுமார், நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

கோப்புப்படம்
நெல்லை ஜூலை 20: நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் (Palayankottai, Nellai district) உள்ள கூட்டுறவு நியாயவிலை கடையில் (cooperative ration shop) , புழக்கத்தில் உள்ள ரூ.100 பழைய நோட்டை வாங்க மறுத்ததால் (Refusal to buy old Rs.100 notes) வாடிக்கையாளர் ரத்தினகுமார் (Ratnakumar) மற்றும் அவரது மனைவியுடன் விற்பனையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்போது, விற்பனையாளர் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, பணத்தை ரத்தினகுமாரின் முகத்தில் வீசி, “கிழித்துப் போடு” எனவும் தவறான முறையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ரத்தினகுமார், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் சம்பந்தப்பட்ட விற்பனையாளருக்கு எதிராக புகார் மனு அளித்துள்ளார். சம்பவம் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், பெரிய அளவில் போராட்டம் நடத்தவுள்ளதாக எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.
“இந்த பணம் செல்லாது; வேறு பணம் கொடுங்கள்”
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ராஜேந்திரன் நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரத்தினகுமார், தனது மனைவியுடன் அருகிலுள்ள கூட்டுறவு நியாயவிலைக் கடைக்கு 2025 ஜூலை 19 நேற்று பொருட்கள் வாங்கச் சென்றார். வாங்கிய பொருட்களுக்கு 100 ரூபாய் புழக்கத்தில் உள்ள பழைய நோட்டைக் கொடுத்தபோது, கடை விற்பனையாளர் அந்த பணத்தை ஏற்க மறுத்து, “இந்த பணம் செல்லாது; வேறு பணம் கொடுங்கள்” என கூறியதாக கூறப்படுகிறது.
Also Read: பராமரிப்பு பணியால் கோவை, ஜோலார்பேட்டை ரயில்கள் ரத்து…
‘பணம் இன்னும் அரசால் செல்லாதது என அறிவிக்கப்படவில்லை’
இதற்கு பதிலளித்த ரத்தினகுமார், “இந்த பணம் இன்னும் அரசால் செல்லாதது என அறிவிக்கப்படவில்லை; ஏன் வாங்க மறுக்கிறீர்கள்?” என வாதிட்டுள்ளார். இதனையடுத்து விற்பனையாளர், ரத்தினகுமார் மற்றும் அவரது மனைவியிடம் தகாத வார்த்தைகளால் பேசியதுடன், அவரிடம் இருந்த ரூ.100 நோட்டைக் கையில் கொண்டு, அவரது முகத்தில் வீசி, “கிழித்துப் போடு” எனக் கூறியதாகவும் கூறப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு
சம்பவத்தால் மனவேதனை அடைந்த ரத்தினகுமார், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தார். சம்பந்தப்பட்ட விற்பனையாளருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளார்.
Also Read: காதலுடன் செல்போனில் பேச்சு: தாலியை கழற்றி வெளியேறிய புதுப்பெண்: கடலூரில் பரபரப்பு
இந்தச் சம்பவம் தொடர்பாக, “மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து பெரிய அளவில் கண்டனப் போராட்டம் நடத்தப்படம்” என ரத்தினகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.