நடுவானில் பறவை மோதி ஏர் இந்தியா விமானம் சேதம் – திக் திக் நிமிடங்கள் – என்ன நடந்தது?

Flight Safety Update: கொழும்புவில் இருந்து 143 பயணிகளுடன் சென்னை நோக்கி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பறவைகள் மோதி சேதமடைந்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பாக காட்சியளித்தது. இது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

நடுவானில் பறவை மோதி ஏர் இந்தியா விமானம் சேதம் - திக் திக் நிமிடங்கள் - என்ன நடந்தது?

மாதிரி புகைப்படம்

Published: 

07 Oct 2025 17:54 PM

 IST

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னை நோக்கி அக்டோபர் 7, 2025 அன்று 164 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா (Air India) விமானத்தின் மீது பறவைகள் மோதி விமானம் சேதமடைந்தது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விமானிகள் துரிதமாக செயல்பட்டு விமானத்தை சென்னையில் பாதுகாப்பாக தரையிறக்கினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனையடுத்து பயணிகள் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த விமானம் சென்னையில் இருந்து மீண்டும் கொழும்பு செல்லவிருந்த நிலையில் விமானம் ரத்து செய்யப்பட்டது. பயணிகள் வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

பறவை மோதி விமானம் சேதம்

கொழும்புவில் இருந்து சென்னை நோக்கி 143 பயணிகளுடன் சென்னை வந்த விமானத்தில் பறவை மோதியதில் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் விமானம் தரையிறங்கியபோது சோனை செய்ததில் விமானத்தின் ஃபேன் பிளேட் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஃபேன் பகுதியில் இருந்த பறவையின் உடலை விமானிகள் அப்புறப்படுத்தினர். அதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்த பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. இந்த தகவல் தெரிந்ததும் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிக்க : தண்டவாள பராமரிப்பு.. விருதுநகர் – திருச்சி ரயில் சேவையில் மாற்றம்!

பாதிப்புக்குள்ளான ஏர் இந்தியா விமானம் மீண்டும் சென்னையில் இருந்து கொழும்பு செல்வதாக இருந்தது. தற்போது விமானத்தில் ஏற்பட்ட பாதிப்பால் அந்த விமானத்தின் பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்த விமானத்தில் செல்லவிருந்த பயணிகள் பத்திரமாக வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். விமானத்தில் பறவை மோதி சேதமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பறவைகளால் விமானங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

பொதுவாக விமானம் பறக்கும்போது பறவை விமானத்தின் இன்ஜினுக்குள் நுழைந்தால் அதனால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக இன்ஜின் பிளேடுகள் நொறுங்கி, இன்ஜின் வேலை செய்வது நிறுத்தப்படலாம். இதனால் பெரும் ஏபத்து ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது. பறவைகளின் தாக்குதலைத் தவிர்க்க விமான நிலையங்களைச் சுற்றி ஒலியை எழுப்பும் கருவிகளை பயன்படுத்துவது வழக்கம். மாறாக இன்ஜினுக்குள் பாதுகாப்பு கருவிகள் வைப்பதில் சாத்தியமில்லை என கூறப்படுகிறது. காரணம் அது இன்ஜினின் செயல்பாட்டை பாதிக்கும்.

இதையும் படிக்க : தீபவாளிக்கு மக்கள் ஊருக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு – எப்படி முன்பதிவு செய்வது? விவரம் இதோ

கடந்த ஜூன் 12, 2025 ஏர் இந்தியா விமானம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து கிளம்பிய சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேர் உட்பட 275 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.