முதல்வர் விஜய்யின் அரசியல் மான்பு.. மு.க ஸ்டாலின் வைகோவை தொடர்ந்து சீமான் மற்றும் அன்புமணியை வீட்டிற்கு சென்று சந்திப்பு..

முதலமைச்சர் விஜய் நீலாங்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தார். முதல்வர் விஜய்யை அன்புமணி ராமதாஸும், அவரது மனைவி சௌமியா ராமதாஸும் வாசலுக்கே வந்து நேரில் வரவேற்றனர். பின்னர், அன்புமணி ராமதாஸ், முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

முதல்வர் விஜய்யின் அரசியல் மான்பு..  மு.க ஸ்டாலின் வைகோவை தொடர்ந்து சீமான் மற்றும் அன்புமணியை வீட்டிற்கு சென்று சந்திப்பு..

கோப்பு புகைப்படம்

Updated On: 

11 May 2026 18:33 PM

 IST

மே 11, 2026: தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தான் பொறுப்பேற்றவுடன் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை சந்தித்து வருகிறார். மே 10ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்திற்குச் சென்று கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணியை தொடங்கினார். பின்னர், அங்கிருந்து சென்னை எழும்பூரில் உள்ள பெரியார் திடலுக்கு சென்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

அதனைத் தொடர்ந்து, இன்று பிற்பகலில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தார். அப்போது உதயநிதி ஸ்டாலினும், மு.க. ஸ்டாலினும் முதலமைச்சர் விஜயை கட்டியணைத்து வரவேற்றனர். அங்கிருந்து சென்னை அண்ணாநகரில் உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “விஜயின் மாண்பு வியக்க வைக்கிறது” என குறிப்பிட்டார்.

பாமக தலைவர் அன்புமணியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு:

இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் நீலாங்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்தார். முதல்வர் விஜய்யை அன்புமணி ராமதாஸும், அவரது மனைவி சௌமியா ராமதாஸும் வாசலுக்கே வந்து நேரில் வரவேற்றனர். பின்னர், அன்புமணி ராமதாஸ், முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

மேலும் படிக்க: விஜயின் பண்பாடு என்னை வியக்க வைத்தது.. கார் வரை சென்று முதல்வர் விஜய்யை வழி அனுப்பிய வைகோ..

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளருடன் சந்திப்பு:

அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற முதல்வர் விஜய், நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் இல்லத்திற்கு சென்று சந்தித்தார். வாசலில் காத்திருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், முதல்வர் விஜயை ஆரத்தழுவி வரவேற்றார். அவரது கையைப் பிடித்தவாறு வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். பின்னர், இருவரும் சிறிது நேரம் அமர்ந்து அரசியல் ரீதியாக பேசினர்.

அரசியல் தலைவர்களை அவர்களது இல்லங்களுக்கே சென்று முதலமைச்சர் விஜய் சந்தித்து பேசியிருப்பது முதிர்ச்சியான அரசியல் செயல்பாடு என பலரும் பாராட்டி வருகின்றனர்.

Follow Us
Related Stories
முதலமைச்சர் விஜய்க்கு திருஷ்டி கழித்த வைகோ வீட்டு பணிப்பெண்கள்.. பதிலுக்கு முதல்வர் செய்த செயல்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..
இரண்டு அணிகளாக பிரிந்த அதிமுக.. எடப்பாடி பழனிசாமிக்கு 17 எம்.எல்.ஏக்கள்.. வேலுமணிக்கு 30 எம்.எல்.ஏக்கள்..
விஜயின் பண்பாடு என்னை வியக்க வைத்தது.. கார் வரை சென்று முதல்வர் விஜய்யை வழி அனுப்பிய வைகோ..
திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்தித்த முதலமைச்சர் விஜய்.. கட்டியணைத்து வரவேற்ற உதயநிதி ஸ்டாலின்..
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி.. எங்கெல்லாம் மழை இருக்கும்?
‘200 யூனிட் இலவச மின்சாரம்’.. தமிழக அரசுக்கு இத்தனை ஆயிரம் கோடி கூடுதல் நிதிச்சுமையா?.. ஷாக் தகவல்!!
'நாளைய தீர்ப்பு' முதல் 2026 அரசியல் வெற்றி வரை.. விஜய்யின் வாழ்வில் தொடரும் ஆச்சர்யங்கள்!
ராஜமௌலியின் 'வாரணாசி' படப்பிடிப்பில் நீர் நெருக்கடி.. 150 தண்ணீர் லாரி கோரிக்கையை நிராகரித்த குடிநீர் வாரியம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மனைவிக்காக பைக்கையே ஆம்புலன்ஸாக மாற்றிய கணவர் - நெகிழ்ச்சி சம்பவம்
560 நாட்களாக செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய விவசாயி