அதிமுகவை விட இரண்டரை மடங்கு முதலீடுகளை ஈர்த்துள்ளோம் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..
CM MK Stalin: கடந்த ஆட்சியில் 62,000 நிறுவனங்கள் இருந்த நிலையில், திமுக ஆட்சியில் 72,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. அதிமுக ஆட்சியை விட இரண்டரை மடங்கு அதிக முதலீடுகளை திமுக ஈர்த்துள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கோவை மாநாட்டில் பேசியுள்ளார்.

கோப்பு புகைப்படம்
கோவை, நவம்பர் 25, 2025: தமிழக பொருளாதாரத்தில் கோவை மாவட்டம் முக்கிய பங்களிப்பு செய்து வருகிறது என்றும், தொழில்நகரான கோவை தற்போது கல்வி, மருத்துவம், சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தேசிய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் புகழ்பெற்று விளங்குகிறது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் கோவையில் நடைபெற்ற TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ரூ. 43,844 கோடி மதிப்பீட்டில் முதலீடுகள்:
மேலும், இந்த மாநாட்டில் 42,792 கோடி ரூபாய் முதலீட்டில் 96,027 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 111 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில் 152 கோடி முதலீட்டில் 452 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 47 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், மொத்தமாக 43,844 கோடி ரூபாய் முதலீட்டில் 1,79,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் படிக்க: 23 வகையான தோட்டங்கள், 2000 ரோஜா வகைகள், விளையாட்டு திடல்.. அதிநவீன வசதிகளுடன் கோவையில் திறக்கப்பட்ட செம்மொழி பூங்கா..
இந்தியாவின் மான்செஸ்டர் கோவை மாவட்டம் – முதலமைச்சர் ஸ்டாலின்:
🌄 திராவிட மாடலே ஏற்றத்திற்கான மாடல்! முடிந்தால் இந்தச் சாதனைகளை முறியடித்துக் காட்டுங்கள்!
☀ தொட்டதெல்லாம் துலங்கும் கோவையில், 161 MoU உள்ளிட்ட 170 திட்டங்கள், ரூ.43,844 கோடி முதலீடுகள், 1,00,709 பேருக்கு வேலைவாய்ப்புகள் என #TNRising மாநாடு பெருவெற்றி!
கடந்த 4 ஆண்டு… pic.twitter.com/yo97IuOQiI
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) November 25, 2025
இந்த நிலையில், முதலீட்டாளர்கள் மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ஜி.டி. நாயுடு, பொள்ளாச்சி மகாலிங்கம் போன்ற புதுமுயற்சிகளுக்கு பெயர் பெற்றவர்கள் கோவை மக்கள். தொடர்ந்து எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். அரசின் ஆதரவு எப்போதும் தொழில் துறையினருக்கு உண்டு. தென் இந்தியாவின் மான்செஸ்டர் ஆக கோவை மாவட்டம் விளங்குகிறது. தென்னிந்தியாவின் மென்செஸ்டர் கோவைக்கு முதலமைச்சராக நான் 15-க்கும் மேற்பட்ட முறை வந்துள்ளேன். கோவை மக்களுக்காக தொடர்ந்து உழைப்போம்.
ஐ.டி கொள்கை கொண்டு வந்தது திமுக அரசு தான்:
25 ஆண்டுகள் முன்கூட்டியே தொலைநோக்குடன் சிந்தித்து செயலாற்றி வருகிறோம். திமுக ஆட்சியையும் தமிழக வளர்ச்சியையும் பிரிக்க முடியாது. இந்தியாவில் முதல் முறையாக 1997 ஐடி கொள்கையை கொண்டு வந்தது திமுக அரசுதான். கோவை மக்களுக்காக தொடர்ந்து உழைப்போம். ஜப்பான், அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு நானே சென்று தொழில் முதலீட்டை ஈர்ப்பேன்.
மேலும் படிக்க: 29 மாவட்ட செயலாளர்களுக்கு வார்னிங் கொடுத்த எடப்பாடி பழனிசாமி.. களப்பணியில் கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவு..
அதிமுக விட இரண்டரை மடங்கு வளர்ச்சி:
கடந்த ஆட்சியில் 62,000 நிறுவனங்கள் இருந்த நிலையில், திமுக ஆட்சியில் 72,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. அதிமுக ஆட்சியை விட இரண்டரை மடங்கு அதிக முதலீடுகளை திமுக ஈர்த்துள்ளது. நான்கு ஆண்டுகளில் 29.69 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளதாக மத்திய அரசின் PF புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
தாய்லாந்து போன்ற நாடுகளோடு போட்டி போட்டு முதலீடுகளைக் கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டுக்கு கிடைத்த முதலீடுகளை தாங்கிக் கொள்ள முடியாத சிலர் பொய்ச் செய்திகளை பரப்புகின்றனர். கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 12,663 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன,” என குறிப்பிட்டுள்ளார்.