சென்னையில் பரபரப்பு.. மு.க.ஸ்டாலின், த்ரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
Bomb Threat to CM MK Stalin House | சென்னையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம், நடிகை த்ரிஷா மற்றும் அரசியல் பிரமுகர் எஸ்வி சேகர் ஆகியோரின் இல்லங்களுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, அக்டோபர் 3: சென்னையில் (Chennai) உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் (Chief Minister MK Stalin), நடிகை த்ரிஷா, நடிகரும் அரசியல் பிரமுகருமான எஸ்.வி.சேகர் உள்ளிட்டோர் வீடு, இல்லம், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை ஆகிய இடங்களுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் சம்பந்தப்பட்ட இடங்களுக்கு காவல்துறையினரும், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனர். ஆனால் இந்த மிரட்டல் போலியான தெரிய வந்தது.
மின்னஞ்சலில் வரும் மிரட்டல்கள்
இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக தமிழ்நாட்டில் வெடிகுண்டு மிரட்டல் விடும் கலாச்சாரம் அதிகரித்து வருவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக சென்னையில் கடந்த ஓராண்டாக மின்னஞ்சல் வழியாக கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள், முதலமைச்சர் வீடு, அமைச்சர்களில் இல்லங்கள், பிரபலங்கள் தொடர்புடைய இடங்கள் ஆகியவற்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க : விஜய்க்கு சப்போர்ட்.. கரூர் சம்பவத்தில் இபிஎஸ் சொன்ன முக்கிய மேட்டர்!
டார்க் வெப்சைட் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல்
டார்க் வெப்சைட் மூலம் வெளிநாட்டில் இருந்து மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இதனால் இந்த செயலில் ஈடுபடுபவரை கண்டறிந்து கைது செய்வதில் போலீஸாரர்கள் கட்டும் சவால் நிலவி வருகிறது. சில நேரங்களில் மதுபோதையிலும், பழிவாங்கும் நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்காக தொலைபேசி வாயிலாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படும்.
இதையும் படிங்க : ‘விஜய் கைது செய்யப்படுவார்’ எப்போது? திமுக சொன்ன பரபரப்பு பதில்!
நம்பரை வைத்து சம்பந்தப்பட்ட ஆளை கண்டறிந்து கைது நடவடிக்கை அல்லது எச்சரிக்கையானது விடுக்கப்படுவது வழக்கம். தமிழகத்தில் ஏற்கனவே பரபரப்பான அரசியல் சூழல் நிலவும் நிலையில், முக்கிய நபர்களின் வீடுகளுக்கு மற்றும் இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.