எய்ம்ஸ் வராது… மெட்ரோவையும் வரவிட மாட்டோம்…. மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

MK Stalin Accuses Centre : கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை என கூறி முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், எய்ம்ஸ் வராது, மெட்ரோ ரயிலையும் வரவிட மாட்டோம் என பாஜக வஞ்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

எய்ம்ஸ் வராது... மெட்ரோவையும் வரவிட மாட்டோம்.... மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

மு.க.ஸ்டாலின்

Published: 

21 Nov 2025 15:26 PM

 IST

சென்னை, நவம்பர் 21 : கோயம்புத்தூர் மற்றும் மதுரை மெட்ரோ பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. அதாவது ஒரு நகரத்தில் மெட்ரோ ரயில் (Metro)திட்டம் செயல்படுத்த, அந்த நகரத்தின் மக்கள் தொகை குறைந்தது 20 லட்சமாக இருக்க வேண்டும். ஆனால் மதுரை மற்றும் கோவையில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் இதற்கு விளக்கமளித்த சென்னை மெட்ரோ நிர்வாகம், மத்திய அரசு மெட்ரோ பணிகளை நிராகரிக்கவில்லை எனவும், சில விளக்கங்கள் கேட்கப்பட்டிருப்பதாகவும் அதற்கு முறையாக பதிலளித்த பிறகு பணிகள் தொடரும் எனவும் தெரிவித்தது. இந்த நிலையில் மதுரையை மத்திய அரசு வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) கருத்து தெரிவித்துள்ளார்.

‘தடைகளை தகர்த்தெறிவோம்’

இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘எய்ம்ஸ் வராது, மெட்ரோ ரயிலையும் வரவிட மாட்டோம் என மதுரையை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராகக் கூடல்நகரில் கூடிய நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர், அனைத்து வழிகளிலும் போராட்டத்தை முன்னெடுத்து, தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகராகத் திகழும் மாமதுரையின் வருங்கால வளர்ச்சிக்கு எதிராகப் போடப்படும் தடைக்கற்களைத் தகர்த்தெறிவோம்’ என பதிவிட்டுள்ளார். 

இதையும் படிக்க : +2 மாணவி கொலை: “பெயரை பச்சை குத்தியுள்ளேன்”.. கைதான இளைஞர் பகீர் வாக்குமூலம்!!

முதல்வரின் எக்ஸ் பதிவு

 

முன்னதாக கவர்னரின் அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு தொடர்பாக அறிக்கை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில உரிமைகளையும், உண்மையான கூட்டாட்சியையும் நிலைநாட்டும் நமது போராட்டம் தொடரும். சட்டமுன்வடிவுகள் மீது முடிவெடுக்க கவர்னர்களுக்கு காலக்கெடு விதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும் வரை நாம் ஓயமாட்டோம்.

இதையும் படிக்க : தமிழகத்தில் 2 லட்சம் மாணவர்களுக்கு பார்வை குறைபாடு.. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அரசியல்சட்டப்பிரிவு 361-க்குப் பின்னால் கவர்னர்கள் ஒளிந்துகொள்ள முடியாது என்பதையும் உறுதிப்படுத்தி உள்ளோம். அரசியல் சட்டத்தால் அமையப்பெற்ற எந்தப் பதவியும் அச்சட்டத்துக்கு அப்பாற்பட்டதில்லை என நான் திடமாக நம்புகிறேன். உயர்ந்த அரசியலமைப்புப் பதவிகளில் இருப்போரே அரசியலமைப்புச் சட்டத்தை மீறி நடந்தாலும், நீதிமன்றங்கள்தான் ஒரே நம்பிக்கை. ஆகவே, நீதிமன்றங்களின் கதவு தீர்வுபெறத் திறந்தே இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

 

வாரணாசி பட நிகழ்வில் நடந்த சுவாரசியங்கள்.... பிரியங்கா சோப்ரா பகிர்ந்த வீடியோ!
ஊழியர்களை கண்காணிக்க புதிய கருவியை பயன்படுத்தும் Cognizant!
ஐபிஎல் ஏலம்.. எப்போது? எங்கு நடைபெறுகிறது? 
மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு மத்திய அரசின் 5 இலவச AI படிப்புகள்.. என்னென்ன தெரியுமா?