Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சோழர் கால ஊற்றுக் கெல்வெட்டு கண்டுபிடிப்பு.. திருவண்ணாமலையில் ஆச்சர்யம்!

Chola Period Stone Inscription Found | திருவண்ணாமலையில் சோழர் கால கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2 அடி அகலம், 6 அடி நீளம் கொண்ட பலகை கல்லில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டுள்ள இது 3 ஆம் குலோத்துங்க சோழனின் 22 ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது.

சோழர் கால ஊற்றுக் கெல்வெட்டு கண்டுபிடிப்பு.. திருவண்ணாமலையில் ஆச்சர்யம்!
கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 04 Jan 2026 21:30 PM IST

திருவண்ணாமலை, ஜனவரி 04 : திருவண்ணாமலை (Tiruvannamalai) மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவகத்தை சேர்ந்த ச.பாலமுருகன், சி.பழனிசாமி, ம.பாரதிராஜா, ஓவியர் சிவக்குமார் ஆகியோர் கொண்ட குழு பாவுப்பட்டு என்ற கிராமத்தை சேர்ந்த லட்சுமியம்மாள் என்ற நபர் அளித்த தகவலின் அடிப்படையில் அங்குள்ள மலை அடிவாரத்தில் ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வில் அந்த பகுதியில் இருந்து 12 ஆம் நூற்றாண்டை சேர்ந்த குலோத்துங்கச் சோழன் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

3 ஆம் குலோத்துங்க சோழனின் 22 ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டு

இந்த கல்வெட்டு 2 அடி அகலம், 6 அடி நீளம் கொண்ட பலகை கல்லில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இது 3 ஆம் குலோத்துங்க சோழனின் 22 ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டில், பெண்ணை வடகரை செங்குன்ற நாட்டில் காட்டாம்பூண்டி மலையடிவாரத்தில் புலவர் அடியான் ஒற்றிக்கொண்டான் திருவானை முகவன் என்பவர் அந்த இடத்தில் உள்ள நீர் ஊற்றை கண்டுபிடித்து அதற்கு சித்திரமேழி பேரூற்று என்று பெயர் சூட்டி அதனை பெரிய நாட்டுக்கு தர்மமாக கொடுத்ததாக கூறப்படும் கதை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கப்பரிசு ரூ.3,000.. அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

கல்வெட்டில் கூறப்பட்டுள்ளதற்கான அர்த்தம் என்ன?

  • அந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள காட்டாம்பூண்டி என்ற ஊர், தற்போது கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்ட கிராமத்திற்கு அருகே அமைந்துள்ளது.
  • தற்போது கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாவுபட்டு கிராமம் அப்போது காட்டாம்பூண்டியின் ஒரு பகுதியாக இருந்துள்ளது.
  • அங்கு தான் புலவர் அடியான் ஒற்றிக்கொண்டான் திருவானை முகவன் என்பவர் அந்த மலைப்பகுதியில் உள்ள இயற்கையான ஊற்றை கண்டுபிடித்து அதற்கு சித்திரமேழி பேரூற்று என்று பெயரிட்டுள்ளார்.
  • சித்திரமேழி என்பது திருவண்ணாமலையில் மிகுந்த செல்வாக்கு மிகுந்த வேளாண் சபையாக இருந்துள்ளது.
  • அந்த சபை பெரிய நாட்டார் சபை என்றும் அழைக்கப்பட்டு வந்த நிலையில், இந்த தர்மத்தை அவர்கள் பெயரில் வழங்கியுள்ளனர்.

இதையும் படிங்க : “மொழிப்போர் தளபதி”.. திமுக மூத்த தலைவர் எல்.கணேசன் காலமானார்

கல்வெட்டு அமைந்துள்ள பகுதியில் ஒரு இயற்கையான சுனை இன்றும் உள்ளது. அது தற்போது ஊத்துக்குட்டை என அழைக்கப்படுகிறது. இந்த சிறப்பு வாய்ந்த கல்வெட்டை தொல்லியல் துறை ஆவணப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.