இன்று தமிழ்நாடு நாள் – முதல்வர் வாழ்த்து..! தமிழர்கள் பெருமை கொள்ளும் வரலாற்றுப் பின்னணி என்ன?

Tamil Nadu Day: ஜூலை 18, 1967 அன்று அண்ணா தலைமையிலான திமுக அரசு சென்னை மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் மாற்றம் கொண்டு வந்தது. 1969 ஜனவரி 14 அன்று இது அதிகாரப்பூர்வமானது. 2021ல் மு.க. ஸ்டாலின் அரசு ஜூலை 18 ஐ தமிழ்நாடு நாளாக அறிவித்தது. இந்நாள் தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்.

இன்று தமிழ்நாடு நாள் –  முதல்வர் வாழ்த்து..! தமிழர்கள் பெருமை கொள்ளும் வரலாற்றுப் பின்னணி என்ன?

இன்று தமிழ்நாடு நாள்

Published: 

18 Jul 2025 10:27 AM

சென்னை ஜூலை 18: ஜூலை 18, 1967 அன்று முதலமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா, (Anna)’சென்னை மாநிலம்‘ (Chennai State) என அழைக்கப்பட்டிருந்த மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ (Tamilnadu) எனப் பெயர் மாற்றத் தீர்மானத்தை கொண்டுவந்தார். இந்த தீர்மானம், 1969 ஜனவரி 14 ஆம் தேதி அதிகாரபூர்வமாக அமலுக்கு வந்தது. தமிழ்நாட்டுக்கு இந்த பெயர் கிடைக்க சுந்தரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் (Sundaralinganar fasts for 76 days) இருந்து உயிர் தியாகம் செய்தார். தந்தை பெரியாரும் பெயர் மாற்றத்துக்காக நீண்ட காலம் வலியுறுத்தினார். 2021ல் முதல்வர் மு.க. ஸ்டாலின் (Chief Minister M.K. Stalin) தலைமையிலான அரசு, ஜூலை 18-ஐ ‘தமிழ்நாடு நாள்’ என அறிவித்தது. இந்நாளில், முதல்வர் ஸ்டாலின் “தமிழ்நாடு நாள் தமிழர்களின் கனவுகள் நனவான வரலாற்றுப் பெருநாள்” என பதிவிட்டுள்ளார்.

‘தமிழ்நாடு’ எனப் பெயரிடப்பட்ட மறுமலர்ச்சித் திருநாள்

சென்னை மாகாணம் என அழைக்கப்பட்டிருந்த தமிழகத்திற்கு, ‘தமிழ்நாடு’ எனப் பெயரிடப்பட்ட மறுமலர்ச்சித் திருநாள் இன்று ஜூலை 18. 1967ஆம் ஆண்டு, திமுக நிறுவனர் பேரறிஞர் அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்று, ‘சென்னை மாநிலம்’ என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என மாற்ற சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். இத்தீர்மானம் இந்திய ஒன்றிய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, 1969ஆம் ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி, தைப்பொங்கல் தினத்தில் அதிகாரபூர்வமாக அமலுக்கு வந்தது.

சுந்தரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம்

இந்த பெயர் மாற்றத்திற்காக சுதந்திரப் போராளியும், தியாகியும் ஆன சுந்தரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார் என்பது வரலாற்றுப் பகுதி. இவரின் போராட்டமும், தந்தை பெரியாரின் வலியுறுத்தல்களும் பின்னணியாக இருந்தன. அண்ணா முதல்வராகப் பதவியேற்ற பிறகு தமிழர்களின் அடையாளமாக “தமிழ்நாடு” என்ற பெயர் சட்டப்பூர்வமாக கொண்டு வரப்பட்ட போது, சட்டமன்றத்தில் மூன்றுமுறை “தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு” என முழக்கம் எழுந்தது.

Also Read: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: சென்னையில் இன்று நடக்கும் முகாம்.. 

தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள்

முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவு

2021ம் ஆண்டு முதல், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஜூலை 18ஐ ‘தமிழ்நாடு நாள்’ என அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த நாளை முன்னிட்டு, திமுக தகவல் தொழில்நுட்ப அணி தனது சமூக வலைதளத்தில் “#தமிழ்நாடு_நாள்” என்ற ஹேஷ்டேக் மூலம் நினைவு கூர்ந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு நாள் – தமிழ்கூறு நல்லுலகின் வரலாற்றில் தனிப்பெரும் நாள். நெஞ்சில் சுமந்த கனவு நனவான நாள்” என குறிப்பிட்டுள்ளார். இன்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் பெருமையுடன் தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுகிறது.