தமிழகத்தில் பரவலாக மழை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு? வானிலை ரிப்போர்ட் இதோ..

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், செப்டம்பர் 22, 2025 வட தமிழகத்தின் சில இடங்களிலும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பரவலாக மழை.. இன்னும் எத்தனை நாட்களுக்கு? வானிலை ரிப்போர்ட் இதோ..

கோப்பு புகைப்படம்

Published: 

22 Sep 2025 06:56 AM

 IST

வானிலை நிலவரம், செப்டம்பர் 22, 2025: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் செப்டம்பர் 21, 2025 அன்று (நேற்று) இரவு முதல் பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பதிவாகி வருகிறது. இதன் காரணமாக வெப்பநிலையின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது. சென்னை பகுதியில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர், சேலம், தர்மபுரி, திண்டுக்கல், கரூர், ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் நள்ளிரவுக்குப் பிறகு மிதமான மழை பதிவானது.

அதே சமயம், தென்னிந்தியாவின் மேல் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக செப்டம்பர் 22, 2025 முதல் செப்டம்பர் 24, 2025 வரை வட தமிழகத்தின் சில இடங்களிலும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க: திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்.. பாலியல் தொல்லையால் ரயில் முன் பாய்ந்த இளைஞர்!

சென்னையில் பரவலாக மழை:


தென் சென்னை, கிழக்கு கடற்கரை சாலை (ECR), ஓஎம்ஆர், சிறுசேரி, தாம்பரம், பூந்தமல்லி, மாங்காடு, வண்டலூர், ஊரப்பாக்கம், மறைமலைநகர், காட்டாங்குளத்தூர், அகரம், கேளம்பாக்கம் ஆகிய பகுதிகளில் நல்ல மழை பதிவாகும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தொடர்ச்சியான மழையின் காரணமாக வெப்பநிலையின் தாக்கம் குறைந்து, அதிகபட்ச வெப்பநிலை சுமார் 33 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை எப்படி இருக்கும்?

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 37.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. அதனைத் தொடர்ந்து மதுரையில் 37.5 டிகிரி செல்சியஸ், ஈரோட்டில் 35.8 டிகிரி செல்சியஸ், கரூரில் 34.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 32.9 டிகிரி செல்சியஸ், மீனம்பாக்கத்தில் 32.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.