வாகன ஓட்டிகளுக்கு புது ரூல்ஸ்.. இனி இது கட்டாயமாம்.. சென்னை காவல்துறை அறிவிப்பு

Chennai Traffic Police : போக்குவரத்து விதிமீறல்களுக்கான விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்தினால் மட்டுமே, வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும் என்ற புதிய ரூல்ஸை சென்னை போக்குவரத்து காவல்துறை கொண்டு வந்துள்ளது. இதுவரை போக்குவரத்து விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட அபராத தொகை ரூ.300 கோடி செலுத்தப்படாமல் இருப்பதால், இதுபோன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு புது ரூல்ஸ்.. இனி இது கட்டாயமாம்.. சென்னை காவல்துறை அறிவிப்பு

சென்னை போக்குவரத்து காவல்துறை

Updated On: 

11 Sep 2025 13:00 PM

 IST

சென்னை , செப்டம்பர் 11 : வாகனங்களுக்கான நிலுவையில் உள்ள அபராத தொகையை செலுத்தினால் தான், இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும் என்ற புதிய நடைமுறை சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களுக்கான அபராத தொகை கட்டாயம் செலுத்த வேண்டிய உள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் என்பது பெரும் பிரச்னையாக உள்ளது. றிப்பாக, இருசக்கர வாகனங்கள் பீக் ஹவரில் ஊர்ந்து செல்லும் நிலையில் இருக்கும். அதே நேரத்தில்,  போக்குவரத்து விதிமீறல்களை தடுக்கவும் ஆங்காங்கே போக்குவரத்து போலீசார் நின்று கண்காணித்து வருகின்றனர். குறிப்பாக, பீக் ஹவர் மற்றும் இரவு நேரங்களில் ஆங்காங்கே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களை போக்குவரத்து காவல்துறை மடக்கி பிடித்து அபராதம் விதித்து வருகிறது. இதோடு, ஒவ்வொரு சாலைகளிம் அதிநவீன் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், நேரடியாக வாகன உரிமையாளர்களின் செல்போன் எண்ணுக்கே அபராத தொகை அனுப்பப்பட்டு வருகிறது. இந்த அபராத தொகையை ஏராளமான வாகன ஓட்டிகள் ஆண்டுக்கணக்கில் செலுத்தாமல் உள்ளனர். போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராத நிலுவை ரூ.300 கோடி இருப்பதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

Also Read : ஈரோடு மக்களுக்கு குட் நியூஸ்… வருகிறது அம்ரித் பாரத் ரயில்.. இனி ஈஸியா போகலாம்!

இனி அபராதம் செலுத்தினால் தான் இன்சூரன்ஸ்

பலமுறை அபராதம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அவர்கள் ஆண்டுக்கணக்கில் செலுத்தாமல் உள்ளனர். இந்த நிலையில், சென்னை போக்குவரத்து காவல்துறை புது ரூல்ஸை கொண்டு வந்துள்ளது. அதாவது,  போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம்  தொகையை செலுத்தினால் மட்டுமே, இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, சென்னை போக்குவரத்து காவல்துறை, இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, இன்சூரன்ஸ் நிறுவன ஆன்லைன் பக்கத்தில் வாகனத்தில் நம்பரை உள்ளீட்டு, இன்சூரன்ஸ் புதுப்பிக்க வேண்டும். ஆனால், சம்பந்தப்பட்ட வாகனம் அபராத தொகையை செலுத்தாமல் இருந்தால், இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியாது.

Also Read : 2 நாள் விடுமுறை… போக்குவரத்து கழகம் சொன்ன குட் நியூஸ்.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதம் தொகை செலுத்த வேண்டும் எனவும், அதற்குபிறகு தான் இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும் எனவும் அறிவுறுத்தப்படும். ஆன்லைன் வாயிலாக புதுப்பித்தாலும், நேரடியாக சென்று இன்சூரன்ஸ் புதுப்பிக்க முயன்றாலும் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராத தொகை செலுத்திய பிறகே, இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.