AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முழுவதுமாக சிங்கார சென்னை அட்டைக்கு மாறிய சென்னை மெட்ரோ!

Singara Chennai Card In Chennai Metro | சென்னை மெட்ரோ போக்குவரத்தில் சிங்கார சென்னை கார்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று முதல் இந்த அட்டை தான் முழுவதுமாக பயன்பாட்டில் இருக்கும் என்று பொதுமக்களுக்கு சில முக்கிய அறிவிப்புகளை அது வெளியிட்டுள்ளது.

முழுவதுமாக சிங்கார சென்னை அட்டைக்கு மாறிய சென்னை மெட்ரோ!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 May 2026 21:41 PM IST

சென்னை, மே 01 : சென்னை மெட்ரோ ரயில் (Chennai Metro Rail) நிறுவனம் இன்று முதல் முழுவதுமாக “சிங்கார சென்னை அட்டைக்கு” (Singara Chennai Card) மாறுகிறது. அதாவது இனி சென்னை மெட்ரோ ரயில்களில் இந்த அட்டையை பயன்படுத்தி மட்டுமே பயணம் செய்ய முடியும். இந்த நிலையில், சிங்கார சென்னை அட்டை என்றால் என்ன, அதனை பயன்படுத்துவது குறித்து அதிகாரிகள் கூறியுள்ள முக்கிய தகவல்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சிங்கார சென்னை அட்டைக்கு மாறிய சென்னை மெட்ரோ

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கூறியுள்ளதாவது, ரயில்களில் பயணம் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயண அட்டை உடன் கூடுதலாக 2023 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி முதல் சிங்கார சென்னை அட்டை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் படி, இந்தியா முழுவதும் உள்ள பொதுப் போக்குவரத்து சேவைகளில் தடையற்ற பயணத்தை உறுதி செய்யும் வகையில் இன்று முதல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சிங்கார சென்னை அட்டைக்கு முழுவதுமாக மாறியுள்ளது என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : வெற்றிப்பெற்று நேராக பனையூர் வாருங்கள்.. நான் காத்திருப்பேன் – வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுரை

பழைய பேலன்ஸ்களை மாற்றிக்கொள்ளலாம்

எனவே மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யவும், மெட்ரோ வாகன நிறுத்தங்களை பயன்படுத்தவும், பயணிகள் தங்களது பழைய பயண அட்டையில் மீதமுள்ள தொகையை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் பெறப்படும் கியூஆர் சேமிக்கப்பட்ட மதிப்பு பாஸ் அல்லது தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு மாற்றிக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய ஆலோசனை

அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, நம்பகமான பயண அனுபவத்தை வழங்க சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் உறுதியுடன் உள்ளது. இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறோம். இந்த விவகாரத்தில் பயணிகளின் முழு ஆதாரவை எதிர்பார்க்கிறோம் என்று கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us