Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சென்னை மக்கள் கவனத்திற்கு.. மின்சார ரயில்கள் ரத்து.. முழு விவரம் இதோ!

Chennai EMU Train Cancelled : சென்னையில் 2025 மே 27ஆம் தேதியான இன்று மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை மக்கள் கவனத்திற்கு.. மின்சார ரயில்கள் ரத்து.. முழு விவரம் இதோ!
சென்னை மின்சார ரயில்கள்Image Source: X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 27 May 2025 07:50 AM

சென்னை, மே 27 : சென்னையில் மின்சார ரயில்கள் (chennai emu train cancelled) 2025 மே 27ஆம் தேதியான இன்று ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு (chennai beach – chengalpattu) வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்து சேவைகளில் ஒன்றாக இருப்பது மின்சார ரயில்கள்.  இந்த மின்சார ரயில்களில் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர்.  புறநகரையும் இணைக்கக் கூடிய வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் பயணித்து வருகின்றனர். புறநகர் பகுதிகளையும் இணைக்கக் கூடியது என்பதால் மின்சார ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். தற்போது, நான்கு முக்கிய வழித்தடங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது.

சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து

அதில், கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடம் மிகவும் முக்கியமானது. இந்த வழித்தடங்களில் ஒருநாள் ரயில் சேவை இல்லாவிட்டாலும், பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இதற்கிடையில், பயணிகளுக்கு சீரான பயணத்தை வழங்க அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

இந்த நிலையில்,  சென்னையில் மின்சார ரயில்கள் 2025 மே 27ஆம் தேதியான இன்று ரத்து செய்யப்படுகிறது.எழும்பூர்-விழுப்புரம் பிரிவில் பாதை அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக 2025 மே 27ஆம் தேதியான இன்று சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, 2025 மே 27ஆம் தேதி காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது, கடற்கரை – செங்கல்பட்டு இடையே காலை 10:56, 11:40 மற்றும் மதியம் 12:28 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

எந்தெந்த வழித்தடங்கள்?

 


மேலும், கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் மதியம் 12.40 மணிக்கு இயக்கப்படும் ரயில், தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. செங்கல்பட்டு – கடற்கரை இடையே மதியம் 12 மணி, மதியம் 1:10 மணி மற்றும் 1:45 மணிக்கு இயக்கப்படும் ரயில் செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் இடையே பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் ரயில் சேவையை மேம்படுத்த தெற்கு ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அண்மையில், சென்னை கடற்கரை – செங்கல்பட்டு இடையே ஏசி மின்சார ரயில்கள் இயக்கப்பட்டது.   காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி வரை  இந்த ரயில்கள் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விற்றுத் தீர்ந்தது விஜய்யின் ஜன நாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமை
விற்றுத் தீர்ந்தது விஜய்யின் ஜன நாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமை...
மே, 2025ல் ரூ.15,000க்கு குறைவான சிறந்த ஸ்மார்ட்போன்கள்
மே, 2025ல் ரூ.15,000க்கு குறைவான சிறந்த ஸ்மார்ட்போன்கள்...
இந்தியாவிற்கு விளையாட வரும் AUS, SA.. அட்டவணை வெளியீடு!
இந்தியாவிற்கு விளையாட வரும் AUS, SA.. அட்டவணை வெளியீடு!...
அயோத்தி பட இயக்குநரின் அடுத்தப் படம்... கதாநாயகன் யார்?
அயோத்தி பட இயக்குநரின் அடுத்தப் படம்... கதாநாயகன் யார்?...
இந்தியாவில் 1,300 ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. WHO எச்சரிக்கை..!
இந்தியாவில் 1,300 ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. WHO எச்சரிக்கை..!...
RBI விதிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது: பெரிய கருப்பன்
RBI விதிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு பொருந்தாது: பெரிய கருப்பன்...
ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை.. பாகிஸ்தானுக்கு PM மோடி எச்சரிக்கை!
ஆபரேஷன் சிந்தூர் முடியவில்லை.. பாகிஸ்தானுக்கு PM மோடி எச்சரிக்கை!...
கமல் ஹாசனின் பேச்சால் நெகிழ்ந்த நடிகர் நானி... வைரலாகும் வீடியோ!
கமல் ஹாசனின் பேச்சால் நெகிழ்ந்த நடிகர் நானி... வைரலாகும் வீடியோ!...
கவுன்சிலர்கள் மோதல்.. தேசிய கீதம் பாடி நிறுத்த முயன்ற அதிகாரிகள்!
கவுன்சிலர்கள் மோதல்.. தேசிய கீதம் பாடி நிறுத்த முயன்ற அதிகாரிகள்!...
உலகின் மிக சிறிய கார் - டிரைவர் எப்படி இந்த காரை ஓட்டுவார்?
உலகின் மிக சிறிய கார் - டிரைவர் எப்படி இந்த காரை ஓட்டுவார்?...
உச்ச நீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம்..!
உச்ச நீதிமன்றத்திற்கு 3 புதிய நீதிபதிகள் நியமனம்..!...