குறையும் வெப்பநிலை.. அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு..

Tamil Nadu Weather Update: தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழையின் தீவிரம் குறைந்ததாலும், மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுவதாலும் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறையும் வெப்பநிலை.. அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு..

கோப்பு புகைப்படம்

Updated On: 

23 Jun 2025 13:34 PM

 IST

வானிலை நிலவரம், ஜூன் 23, 2025: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் அதிகபட்சமாக 11 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து கோவை மாவட்டம் சோலையார் சின்கோனா உள்ளிட்ட பகுதிகளில் 9 மற்றும் 10 சென்டிமீட்டர் மழை தலா பதிவாகியுள்ளது. சென்னையில் சோளிங்கநல்லூர் காசிமேடு எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் நான்கு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு பருவமழையின் தீவிரம் குறைந்த நிலையில் இந்த மழை பதிவானது நிகழ்ந்துள்ளது. தென்மேற்கு பருவ மழை மே மாதம் தொடங்கியது முதலில் நல்ல மழை பதிவான நிலையில் தற்போது அதன் தாக்கம் ஆனது தமிழகத்தில் வெகுவாக குறைந்துள்ளது.

மிதமான மழைக்கு வாய்ப்பு:

மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஜூன் 23 2025 அன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை ஜூன் 29 2025 ஆம் தேதி வரை நீடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் குறையும் வெப்பநிலை:


சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் சென்னையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக மாலை நேரம் மற்றும் இரவு நேரங்களில் காற்றுடன் கூடிய கனமழை நகரின் ஒரு சில பகுதிகளில் பதிவாகி வருகிறது. குறிப்பாக கிழக்கு கடற்கரை சாலை, சென்னை தாம்பரம், புறநகர் பகுதிகள் மற்றும் நகரில் ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

ஜூன் இரண்டாம் வாரம் மற்றும் மூன்றாவது வாரத்தில் சென்னையில் 40 டிகிரி செல்சியஸ் நெருங்கி வெப்பநிலை பதிவானது. ஆனால் கடந்த இரண்டு மூன்று நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக வெப்பநிலையின் தாக்கமும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் தமிழகத்தில் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை என்பது 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வருகிறது

மத்திய வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோர பகுதிகள், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வாங்க கடல், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வடக்கு மற்றும் தென்மேற்கு அரபிக் கடலில் சூறாவளி காற்று மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

Follow Us
Related Stories
எரிவாயு தட்டுப்பாடு.. மத்திய மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..
ஈரான் போர் தாக்கம்.. எரிவாயு தட்டுப்பாடு குறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!
பசுமை காடுகளுக்கு மத்தியில் “குட்டி குற்றாலம்”.. பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பக்காவான இடம்!
மதுபோதையில் கொடூர தாக்குதல்.. ஆத்திரத்தில் கத்தியை எடுத்த தாய்.. ரத்தம் வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மகன்.. அடுத்து நடந்த விபரீதம்!
Seeman Tamil Nadu Election: தனித்து களம் காணும் நாதக… காங்கிரஸ் கோட்டையில் களமிறங்கும் சீமான்.. வெற்றியை வசமாக்குவாரா!
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..