AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. கனமழை எச்சரிக்கை எங்கே ?

Tamil Naadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. கனமழை எச்சரிக்கை எங்கே ?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 11 Jun 2026 06:25 AM IST

ஜூன் 10, 2026: தமிழகத்தில் அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தென் தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் கனமழை பதிவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதே சமயம், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் நல்ல மழை பதிவிற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

எங்கெல்லாம் கனமழை இருக்கும்?

மேலும், நெல்லை, கோவை, கன்னியாகுமரி, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 12ஆம் தேதியைப் பொறுத்தவரையில், நெல்லை, கோவை, குமரி, நீலகிரி, திண்டுக்கல், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி, கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்: எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சி

ஜூன் 13ஆம் தேதியைப் பொறுத்தவரையில், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்களில் லேசான மழைக்கான வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த வானிலை நிலைமை ஜூன் 16ஆம் தேதி வரை நீடிக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் வெப்பநிலை:

மழை ஒரு பக்கம் இருந்தாலும், வெப்பநிலையின் தாக்கமும் கணிசமாக உயர்ந்து வருகிறது. வரக்கூடிய நாட்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது என்றும், ஒரு சில இடங்களில் மட்டும் இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம், அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் நிலவும் வட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியங்கள் ஏற்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரைவும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது. மேலும், அதிக வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் அசௌகரியங்களை சந்திக்க நேரிடலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow Us