2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. சென்னையில் கொட்டிய கனமழை..
Tamil Nadu Weather Update: தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், ஆகஸ்ட் 4 2025 தேதியான இன்று கோவை நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை நிலவரம், ஆகஸ்ட் 4,2025: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. அதேபோல் குமரி கடலை ஒட்டி உள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஆகஸ்ட் 4 2025 தேதியான இன்று கோவை நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்:
ஆகஸ்ட் 5, 2025 தேதியான நாளை நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை அதாவது அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தேனி, தென்காசி, ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மதுபோதையில் ரயில் நிலைய நடைமேடையில் காரை ஓட்டிய நபர் – வைரலாகும் வீடியோ
வருகின்ற ஆகஸ்ட் 6 2025 அன்று கோவை, நீலகிரி தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் பகல் நேரங்களில் வெப்பநிலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகபட்ச வெப்பநிலை என்பது 38 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கிறது.
மேலும் படிக்க: வெளுக்கப்போகும் கனமழை.. 8 மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு.. தமிழக அரசு நடவடிக்கை
சென்னையில் கொட்டித்தீர்த்த மழை:
A Red Thakkali over Tambaram and surrounding areas – over 50 mm recorded in just 30 mins. A superb storm. pic.twitter.com/IlORLhHXG4
— Tamil Nadu Weatherman (@praddy06) August 3, 2025
இந்நிலையில் ஆகஸ்ட் 3, 2025 தேதி ஆன நேற்று சென்னை புறநகர் பகுதிகளில் நல்ல மழை பதிவு இருந்தது குறிப்பாக தாம்பரம் முடிச்சூர் போன்ற பகுதிகளில் சுமார் 30 நிமிடங்களில் 50 மில்லி மீட்டர் வரை அதாவது 5 சென்டிமீட்டர் வரை மழை பதிவானது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.