ஒரு பக்கம் வெயில்.. ஒரு பக்கம் மழை.. வரக்கூடிய நாட்களில் வானிலை எப்படி இருக்கும்?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை, பகல் நேரங்களில் ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு பக்கம் வெயில்.. ஒரு பக்கம் மழை.. வரக்கூடிய நாட்களில் வானிலை எப்படி இருக்கும்?

கோப்பு புகைப்படம்

Published: 

25 Feb 2026 06:25 AM

 IST

வானிலை நிலவரம், பிப்ரவரி 25, 2026: தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு திசையில் நகர்ந்து வலுவிழக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், தெற்கு கேரளா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழ்எடுக்கச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் வரக்கூடிய அடுத்த சில நாட்களுக்கு ஓரிரு மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு:

அந்த வகையில், பிப்ரவரி 25ஆம் தேதியான இன்று தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் பல இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 26 மற்றும் பிப்ரவரி 27ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பதிவாகக்கூடும். பிப்ரவரி 28ஆம் தேதியிலும் அதே நிலை தொடரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: புதிய கட்சியை தொடங்கிய சசிகலா  – கட்சி கொடியும் வெளியீடு

மார்ச் 1ஆம் தேதியை எடுத்துக்கொண்டால், தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழக முழுவதும் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் வெப்பநிலை:

பகல் நேரங்களில் வெப்பநிலையின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள சூழலில், அதிகாலை வேளையில் பனிமூட்டமும் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில், இன்றும் நாளையும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலையைப் பொருத்தவரை, ஒரு சில இடங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் மழைக்காலமும் பனிக்காலமும் முடிவடைந்துள்ள சூழலில், வரக்கூடிய நாட்களில் கோடைக்காலம் தொடங்கியுள்ளதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக, வரக்கூடிய நாட்களில் பகல் நேர வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: தீபத்தூண் சர்ச்சை : திருப்பரங்குன்றத்தில் சாமி தரிசனம் செய்யும் பிரதமர் மோடி – விவரம் இதோ

குறைந்தபட்ச வெப்பநிலையை எடுத்துக்கொண்டால், பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானிலை எப்படி இருக்கும்?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்தவரை, பகல் நேரங்களில் ஒரு சில இடங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 32 டிகிரி செல்சியஸ், கரூர் மற்றும் சேலத்தில் 35.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 35 டிகிரி செல்சியஸ், தஞ்சாவூரில் 34 டிகிரி செல்சியஸ், மதுரையில் 33.2 டிகிரி செல்சியஸ் மற்றும் தர்மபுரியில் 33.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சென்னைப் பொருத்தவரை, அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 33.3 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 32.0 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சூனியக்காரி எனக்கூறி பெண்ணை உயிரோடு எரித்துக்கொன்ற கிராமத்தினர் - அதிர்ச்சி சம்பவம்
இரவில் குழந்தைகள் எழுந்து உட்கார்ந்து சத்தமாக கத்துகிறதா? இதுதான் காரணம்
நோயாளிகளின் 9 பேரின் கண்கள் நீக்கம்...பார்வையிழந்த 9 பேர்... உத்தரப்பிரதேசத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
அப்பாவின் பெயர் கட்டாயமில்லை.. சிறுமி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு