6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த பகுதிகளில்? எத்தனை நாட்களுக்கு ?

Tamil Nadu Weather Update: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அதிகபட்ச வெப்பநிலை என்பது 32 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த பகுதிகளில்? எத்தனை நாட்களுக்கு ?

கோப்பு புகைப்படம்

Published: 

21 Jul 2025 15:42 PM

வானிலை நிலவரம், ஜூலை 21, 2025: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து கோவை மாவட்டத்தின் சின்னகல்லாரு, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, திருவள்ளூர், நாலுமுக்கு திருநெல்வேலி மாவட்டம் ஆகிய இடங்களில் சில நான்கு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதுபோக நீலகிரி, தென்காசி, சென்னை, கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், வேலூர், வாலாஜா, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலும் நல்ல மழை பதிவு இருந்தது. இந்நிலையில் தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. அதேபோல தென்னிந்திய பகுதிகளில் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது.

6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:

இதன் காரணமாக ஜூலை 21 2025 தேதியான இன்று நீலகிரி, தென்காசி, தேனி, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஜூலை 22 2025 ஆம் தேதியான நாளை நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கன மழை இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து 2025 ஜூலை 24 முதல் ஜூலை 27ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு:


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அதிகபட்ச வெப்பநிலை என்பது 32 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கக் கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஓரணியில் தமிழ்நாடு.. ஓடிபி பெற இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்..

அதேபோல் வட தமிழக கடலோர பகுதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில், தமிழக கடலோர பகுதிகளில், தென்மேற்கு மற்றும் தென் கிழக்கு வங்க கடலின் சில பகுதிகளில், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில், மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்க கடலில், மதியமேற்கு அரபிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் வீச கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.