3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. சென்னையில் மழைக்கு வாய்ப்பா?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஜூலை 3, 2026: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் சற்று தணிந்திருந்தாலும், ஒரு சில மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், மதுரையில் அதிகபட்சமாக 39.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து திருச்சி – 38.1 டிகிரி செல்சியஸ், பரங்கிப்பேட்டை – 38.6 டிகிரி செல்சியஸ், பாளையங்கோட்டை – 38.0 டிகிரி செல்சியஸ் மற்றும் நாகப்பட்டினம் – 38.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
வெப்பநிலை எப்படி இருக்கும்?
சென்னையைப் பொறுத்தவரை, மீனம்பாக்கத்தில் 37.5 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 36.9 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. வரும் நாட்களிலும் வெப்பநிலையில் பெரிய அளவிலான மாற்றம் இருக்காது என்றும், இயல்பை ஒட்டியே நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா – மேற்கு வங்கக் கடலோரப் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை எங்கே?
ஜூலை 3-ஆம் தேதி (இன்று), கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் படிக்க: அதிமுகவில் தொடர் அதிரடி மாற்றம்.. புதிய செயலாளர்கள் களமிறக்கல்.. எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவு!
ஜூலை 4-ஆம் தேதி, கோவை, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை தொடர்கிறது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 5 முதல் 7-ஆம் தேதி வரை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மழை இருக்குமா?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.