சுட்டெரிக்கும் சூரியன்.. சதம் அடிக்கும் வெயில் ஒரு பக்கம்.. கொட்டும் மழை ஒரு பக்கம்.. வானிலை ரிப்போர்ட்..
வரக்கூடிய நாட்களில் வெப்பநிலையில் பெரிய அளவு மாற்றம் இருக்காது என்றும், இதே நிலை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஒரு சில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் அதிக வெப்பநிலையும் ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோப்பு புகைப்படம்
Follow Us