Chennai Property Tax : சொத்து வரி செலுத்தியாச்சா? கடைசி நாள் இதுதான்.. தவறினால் அபராதம்!

Chennai Corporation : நடப்பு அரையாண்டுக்கான சொதுது வரியை 2025 செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அரசு இ சேவை மையங்கள், இணையதளம் மூலமாக சொத்து வரியை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பேடிஎம், வாட்ஸ் ஆப் எண் மூலமும் சொத்து வரியை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Property Tax : சொத்து வரி செலுத்தியாச்சா? கடைசி நாள் இதுதான்.. தவறினால் அபராதம்!

சென்னை மாநகராட்சி

Updated On: 

12 Sep 2025 20:05 PM

 IST

சென்னை, செப்டம்பர் 12 : சொத்து வரியை (Chennai Property Tax) 2025 செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி (Chennai Corporation)  தெரிவித்துள்ளது. 2025 செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் செலுத்த தவறினால், அபராத்துடன் செலுத்த வேண்டியிருக்கும். தமிழகத்தில் மிகப்பெரிய மாநகராட்சியாக சென்னை விளங்கி வருகிறது. மாநகராட்சி, நகராட்சிகளில் சொத்து வரி, தொழில் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக சென்னை மாநகராட்சி மக்கள் தொகை அதிகம். மக்கள் தொகைக்கு ஏற்ப, வீடுகளும், வணிக கடைகளும் இருந்துள்ளன. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 14 லட்சத்திற்கும் அதிகமான வீடுகளும், கடைகளும் இருந்து வருகின்றன. எனவே, சொந்த வீடு, சொத்து மற்றும் தொழில் நிறுவனங்கள் வைத்திருக்கும் பொது மக்களிடம் இருந்து சொத்து வரி மற்றும் தொழில் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.

ஆண்டுக்கு இரண்டு முறை சொத்து மற்று தொழில் வரி செலுத்தி வேண்டும். ஏப்ரல் – செப்டம்பர் மற்றும் அக்டோபர் – மார்ச் மாதத்திற்கு இடையே என இரண்டு முறை சொத்து வரி செலுத்த வேண்டியுள்ளது. இந்த சொத்து வரியை சரியாக வசூலிக்கும் நடவடிக்கையில் மாநகராட்சி தீவிரமாக இருந்து வருகிறது. மாநகராட்சியின் மொத்த வருவாயில் 35 சதவீதம் சொத்து மற்றும் தொழில் வரிகளில் இருந்து பெறப்படுகிறது. இதனால், சொத்து வரியை தீவிரமாக மாநாகராட்சி வசூல் செய்து வருகிறது. குறிப்பிட்ட நாட்களில் செலுத்தவில்லை என்றால், ஒவ்வொரு மாதத்திற்கும் அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

Also Read : வடபழனி முருகன் கோயில் அருகே திருமண மண்டபம்.. அறநிலைத்துறைக்கு உத்தரவிட்ட நீதிமன்றம்

செப்டம்பருக்குள் சொத்து வரி செலுத்த உத்தரவு


அதே நேரத்தில், பொதுமக்கள் வரி செலுத்துவதை ஊக்குவிக்க மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு சிறப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், முறையாக வரி செலுத்துபவர்களுக்கு பரிசு போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.  இப்படியான நிலையில், சென்னை மாநகராட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, சொத்து வரி  மற்றும் தொழில் வரி செலுத்தாதவர்கள் 2025 செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், “பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிடிய நடப்பு அரையாண்டிற்கான சொத்து வரியினை உரிமையாளர்கள் 2025 செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

Also Read : பயணிகளே உஷார்.. ஆம்னி பேருந்தில் 43 சவரன் நகை திருட்டு.. டீ குடிக்க இறங்கியபோது சம்பவம்!

அரசு இ சேவை மையங்கள், இணையதளம் மூலமாகவும் மற்றும் RTGS, NEFT, PAYTM, நம்ம சென்னை செயவி, கிரெடிட், டெபிட், யுபிஐ, சென்னை மாநகாட்சி வருவாய் துறையில் உள்ள காசோலை இயந்திரம் மூலமாகவும், அரசு அலுவலகங்களில் உள்ள க்யூர்ஆர் கோர்ட் மற்றும வாட்ஸ் அப் எண் 9445061913 மூலமாகவும் செலுத்தலாம். உங்கள் சொத்து வரியை செப்டம்பர் 30-க்குள் செலுத்தி 1% தனி வட்டியினை தவிர்க்கவும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.