வீட்டிலுள்ள பழைய பொருட்களை அகற்ற வேண்டுமா? மாநகராட்சியின் புதிய சேவை.. மிஸ் பண்ணாதீங்க
Chennai Corporation : வீட்டில் உள்ள மரச் சாமான்கள், தேவையில்லாத துணிகள், கழிவுகளை வாரம் தோறும் அகற்றலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. 1913 என்ற உதவி எண்ணுக்கு மக்கள் வாரந்தோறும் சனிக்கிழமையில் தொடர்பு கொண்டு பழைய பொருட்களை அகற்ற முடியும். மேலும், 94450 61913 என்ற எண்ணுக்கு whatsapp மூலமாகவும், நம்ம சென்னை ஆப் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

சென்னை மாநகராட்சி
சென்னை, அக்டோபர் 05 : வீடுகளுக்கே சென்று பெரிய அளவிலான குப்பைகளை சேகரிக்கும் திட்டம் ஒன்றை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வீட்டில் உள்ள மரச் சாமான்கள், தேவையில்லாத துணிகள், கழிவுகளை வாரம் தோறும் அகற்றலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. சென்னையில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் போன்றவை ஏற்பட்டு வருகிறது. குப்பைகளும் அதிகரித்து வருகிறது. எனவே சென்னை சுற்றுப்புறங்களை தூய்மையாக வைக்க சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக சட்ட விரோதமாக சாலைகளில் குப்பை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.
சாலைகளில் கேமரா போன்றவையும் பொருத்தப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் தான் சென்னை மாநகராட்சி புதிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. அதாவது வீட்டில் உள்ள பழைய பொருட்களை சேகரிக்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி தொடங்க உள்ளது. அதாவது, சென்னை மாநகர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் தேங்கி கிடக்கும் பயன்படுத்த முடியாத அல்லது தேவையற்ற பழைய பொருட்களை சேகரித்து அகற்றுவதற்காக சென்னை மாநகராட்சி புதிய சேவையை தொடங்கியுள்ளது.
Also Read : பர்வதமலையில் ஏறும்போது ஏற்பட்ட வலிப்பு – தவறி விழுந்த பக்தர் மரணம் – சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்
வீட்டிலுள்ள பழைய பொருட்களை அகற்ற புதிய சேவை
Good initiative from @chennaicorp 👌
*வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை அகற்ற சென்னை மாநகராட்சியின் புதிய சேவை: சனிக்கிழமைகளில் மட்டும்*
சென்னை மாநகரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் வீடுகளில் தேங்கிக் கிடக்கும் பயன்படுத்த முடியாத அல்லது தேவையற்ற பழைய பொருட்களைச்… pic.twitter.com/IwfS6z2DJX
— வரவணை செந்தில் (@Varavanaisen) October 4, 2025
இந்த சேவை மூலம் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பழைய சோபாக்கள், நாற்காலிகள், துணிகள், பழைய மின்னணு சாதனங்கள், பாத்திரங்கள் உள்ளிட்டவற்றை அகற்ற முடியும். இந்த சேவை வாரம் தோறும் சனிக்கிழமை மட்டுமே வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. வாராந்திர அடிப்படையில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் வீடுகளுக்கே சென்று பழைய பொருட்களை சேகரிப்பார்கள். இதற்காக பிரத்யேக எண்னை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.
Also Read : லீவு முடிந்து சென்னை போறீங்களா? சிறப்பு ரயில்கள் இயக்கம்.. மிஸ் பண்ணாதீங்க
1913 என்ற உதவி எண்ணுக்கு மக்கள் வாரந்தோறும் சனிக்கிழமையில் தொடர்பு கொண்டு பழைய பொருட்களை அகற்ற முடியும். மேலும், 94450 61913 என்ற எண்ணுக்கு whatsapp மூலமாகவும், நம்ம சென்னை ஆப் மூலமாகவும் மக்கள் தொடர்பு கொண்டு தங்கள் வீட்டில் உள்ள பழைய பொருட்களை அகற்றலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.