கலரத்தை தூண்டும் வகையில் பதிவு – ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு

Karur Stampede : சமூக வலைதளங்களில் வன்முறையைத் தூண்டும் விதமாக பதிவிட்டதாக தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் விரைவில் கைது செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கலரத்தை தூண்டும் வகையில் பதிவு - ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு

விஜய் - ஆதவ் அர்ஜூனா

Published: 

30 Sep 2025 20:25 PM

 IST

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கரூரில் நடைபெற்ற விஜய்யின் (Vijay )பரப்புரையில் 41 பேர் உயிரிழந்தனர்  மர்றும் பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் தங்களது யூகங்களை பதிவிட்டு வந்தனர். இந்த நிலையில் ஐஏஎஸ் அதிகாரி அமுதா இதுகுறித்து அளித்துள்ள விளக்கத்தில்,  கூட்டம் அதிகரிக்கவே, டிஎஸ்பி,  விஜய் தரப்பினரிடம் முன்னே செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டார்கள். ஆனால் தவெக நிர்வாகிகள் ஏற்றுக்கொள்ளாமல், இன்னும் முன்னே செல்வோம் என சொல்லிவிட்டு சென்றார்கள் என்றார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டதாக அக்கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜூனா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆதவ் அர்ஜூனாவின் சர்ச்சை பதிவு

தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா சர்ச்சைக்குரிய வகையில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அவரது பதிவில், அதாவது, “சாலையில் நடந்து சென்றால் தடியடி. சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டால் கைது. இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி. எப்படி இலங்கையிலும், நேபாளத்திலும் இளைஞர்களும், GEN Z தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும்.

இதையும் படிக்க : கலவரத்தை தூண்டும் விதமாக ஆதவ் அர்ஜுனா பதிவு.. சில நிமிடங்களில் டெலிட்.. கொதித்தெழுந்த திமுக!

அந்த எழுச்சி தான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரசு பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப் போகிறது என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் பின்னர் அவர் தனது பதிவை நீக்கி விட்டார். இருப்பினும் அவரது பதிவு சமூக வலைதளங்களில் வைரலானது.

ஆதவ் அர்ஜூனா கைது

ஆதவ் அர்ஜூனாவின் பதிவிற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்து கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டதாக ஆதவ் அர்ஜூனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது.

சமூக வலைதளங்களில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அவதூறு பரப்பியதாக தவெகவினர் 2 பேர் மற்றும் பாஜகவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் இது தொடர்பாக யூடியூபர் பெலிக்ஸ் ஜெயராஜ் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக 25 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிக்க : கரூர் சம்பவம்.. முன்ஜாமீன் கோரி புஸ்ஸி ஆனந்த் நீதிமன்றத்தில் மனு!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக 3 நாட்களுக்கு பிறகு வீடியோ வெளியிட்ட விஜய், தான் 5க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டதாகவும் அங்கு எல்லாம் ஏற்படாத பிரச்னை கரூரில் மட்டும் விபத்து ஏற்பட்டது எப்படி என கேள்வி எழுப்பினார். மேலும் கரூர் மக்கள் தங்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தற்காக நன்றி தெரிவித்தார்.