விஜய் வீட்டில் பரபரப்பு.. வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் நீலாங்கரையில் குவிந்த போலீஸ்
TVK Leader Vijay : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட ஒருவர், விஜய் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.

தவெக தலைவர் விஜய்
சென்னை, அக்டோர் 09 : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட ஒருவர், விஜய் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சமீப நாட்களில் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வருகின்றனர். விமான நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், அரசியல் தலைவர்களின் வீடுகள், சினிமா பிரபலங்களின் வீடுகள், அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலமாகாவோ, போன்கால் மூலமாகவோ விடுக்கப்பட்டு வருகிறது. இதனால், அவ்விடத்தில் சென்று சோதனை செய்து பார்த்தால் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வருகின்றது.
இதுபோன்ற போலி வெடி குண்டு மிரட்டலை தடுக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்த வருகிறது. இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வீட்டிற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட ஒருவர், விஜய் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, போலீசார் மோப்ப உதவியுடன் தீவிர சோதனை செய்து வருகின்றனர். இதனால், நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டில் போலீசார் குவிந்துள்ளனர்.
Also Read : குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு? – மதுரை அருகே அதிர்ச்சி சம்பவம்!
இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு எதுவும் விஜய் வீட்டிற்கு கண்டறியப்படவில்லை. இதனால், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என போலீசார் கூறுகின்றனர். மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். அந்த நபர் என்ற யார் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். கடந்த வாரம் கூட, தவெக தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேய மீண்டும் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
Also Read : அதிமுகவுடன் கூட்டணியா? – இபிஎஸ் பரப்புரையில் தவெக கொடி!
ஏற்கனவே கரூர் சம்பவத்திற்கு பிறகு, நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தவெக தலைவர் விஜய் கரூர் செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக 2025 அக்டோபர் 8ஆம் தேதியான நேற்று டிஜிபிக்கு கரூர் செல்வதற்கு அனுமதி கோரியும், பாதுகாப்பு வழங்கவும் இமெயில் மூலம் கடிதம் அனுப்பி இருக்கிறார். இதற்கு டிஜிபியும் மாவட்ட எஸ்பியை அணுகலாம் என பதிலளித்திருந்தார். இதனால், விஜய் விரைவில் கரூர் செல்ல திட்டமிட்டிருக்கிறார்.