எதன் அடிப்பைடையில் மாரி செல்வராஜ் சொல்கிறார்? – நயினார் நாகேந்திரன் கேள்வி
Nainar Nagendran : கோயம்புத்தூரில் மாவட்ட நிர்வாகிகளின் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக அரசு தொடர்பாக கடுமையான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். அப்போது மாரி செல்வராஜ் தன் மீது வைத்த குற்றச்சாட்டுக்கும் விளக்கம் அளித்தார்.

மாரி செல்வராஜ் - நயினார் நாகேந்திரன்
கோயம்புத்தூர், அக்டோபர் 22: தீபாவளி (Diwali) பண்டிகையையொட்டி தமிழகத்தில் ரூ.890 கோடி மதுபானம் விற்று சாதனை படைத்துள்ளது திமுக அரசு என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் (Nainar Nagendran) கடுமையாக விமர்சித்துள்ளார். கோயம்புத்தூரில் அக்டோபர் 22, 2025 அன்று நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசின் செயல்பாடுகள், மழை நீர் மேலாண்மை, தொழில் முதலீடுகள் மற்றும் மகளிர் உரிமை திட்டம் குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அப்போது பேசிய அவர், தீபாவளி நாளில் ரூ.890 கோடி மதுபானம் விற்று விற்று அதனையே சாதனையாக சொல்கிறார்கள். உண்மையில் இது தான் சாதனையா என கேள்வி எழுப்பினார். அவர் பேசிய குறித்து விரிவாக ாபர்க்கலாம்.
மழை நீர் வடிகால் பணிகள் எங்கே?
மேலும் பேசிய அவர், அரசு எப்போதும் 95 சதவீத மழை நீர் வடிகால் பணிகள் முடிந்துவிட்டதாகச் சொல்கிறது. ரூ.5,000 கோடி செலவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் அந்தப் பணம் எங்கே போனது? இன்னும் சாலைகளில் நீர் தேங்கி நிற்கிறது, மக்கள் துன்புறுகிறார்கள். இது எந்தப் பணம் எங்கே செலவானது என்று வெளிப்படைத்தன்மையுடன் சொல்ல முடியாத அரசாக திமுக மாறிவிட்டது. தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் பிரச்னைகளுக்கு அரசாங்கம் இதுவரை தீர்வு காணவில்லை. மகளிர் உரிமைத் தொகை வழங்குவதிலும் குழப்பம் நிலவுகிறது. சிலருக்கு தொகை வந்திருக்கிறது, சிலருக்கு வரவில்லை.
இதற்கே சரியான அமைப்பு இல்லை என்றார்.
இதையும் படிக்க : கல்லை கடவுளாக மாற்ற தெரிந்தவனுக்கு… கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் – விமர்சனத்துக்கு அன்பில் மகேஷ் விளக்கம்
சட்டமன்றத்தில் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கும், அமைச்சர்கள் தரும் பதில்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தொழில் முதலீடுகள் பற்றிய வெள்ளை அறிக்கை கேட்டால்,
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, வெறும் வெள்ளை காகிதமே காட்டுகிறார். இது தான் திமுக அரசின் நிர்வாக முறை என்றார்.
மாரி செல்வராஜ் என்ன அடிப்படையில் சொல்கிறார்?”
திருநெல்வேலியில் நான் களம் இறங்கப் பயப்படுகிறேன் என இயக்குனர் மாரி செல்வராஜ் கூறுகிறார் என்கிறார்கள். அவர் எந்த அடிப்படையில் இப்படி சொல்கிறார் என எனக்கே தெரியவில்லை. உண்மையில் தமிழகத்தில் அமைதியான பகுதி கொங்கு மண்டலம். அங்கேதான் மக்கள் சிந்தனையுடன் இருக்கிறார்கள். தீபாவளி நாளில் ரூ.890 கோடி மதுபானம் விற்றுள்ளது. இது தான் திமுக அரசின் சாதனையா? ஆனால் விரைவில் இதுபோன்ற நிலைமைகள் மாற்றப்படும். மக்கள் விழித்துக்கொண்டிருக்கிறார்கள். என்றார்.
இதையும் படிக்க : ‘மீண்டும் திமுக வந்தால் தவெக கதி அவ்வளவு தான்’ – ஆர்.பி.உதயகுமார்!
எந்தக் கட்சியிலிருந்தாலும், தவறு நடந்தால் அதைச் சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை. பொதுமக்களின் நலனுக்காகவே பாஜக குரல் கொடுக்கிறது. மக்கள் நலனைக் காட்டிலும் அரசியல் புகழை முன்னிலைப்படுத்தும் ஆட்சி நீடிக்காது என்றார்.