ஆளுநர் தேநீர் விருந்தில் தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை? நயினார் நாகேந்திரன் விளக்கம்!!

இந்தக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷும் ஒன்றாக நின்று பேசுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில், தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்க உள்ளது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆளுநர் தேநீர் விருந்தில் தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை? நயினார் நாகேந்திரன் விளக்கம்!!

நயினார் நாகேந்திரன் - எல்.கே.சுதிஷ்

Published: 

26 Jan 2026 21:05 PM

 IST

சென்னை, ஜனவரி 26: ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். இதில் முதலமைச்சர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், நாடாளுமன்ற. சட்டமன்ற உறுப்பினர்கள், ஐகோர்ட்டு நீதிபதிகள், மூத்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் எனப் பலரும் பங்கேற்பார்கள். அந்த வகையில், 77வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று தேநீர் விருந்து நடைபெற்றது. இதில், உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, சென்னை காவல் ஆணையாளர் அருண், உயர்நீதிமன்ற நீதிபதிகள், முன்னாள் ஆளுநர்கள் ஆகியோர் பங்கேற்றனர். அதோடு, தமிழகத்தில் உள்ள பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.

மேலும் படிக்க: மதுரை-திருநெல்வேலி வழியாக ஜன.28- இல் அம்ரித் பாரத் ரயில் சேவை…தெற்கு ரயில்வே அறிவிப்பு!

ஆளுநர் விருந்தை புறக்கணித்த திமுக:

அதன்படி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், வளர்மதி, வைகைச்செல்வன், பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன், பாமக அன்புமணி தரப்பினர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, தேமுதிக சார்பில் எல்.சுதீஷ், தமிழக அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம் ஆகியோர் இந்த விருந்தில் பங்கேற்றனர். அதேசமயம் திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, மநீம, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகிய கட்சிகள் இந்த விருந்தை புறக்கணித்தன.

தேமுதிக, புதிய தமிழகம் பங்கேற்பு:

இந்நிலையில், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பல கட்சிகள் தங்களது கூட்டணி குறித்து அறிவித்து வருகின்றன. ஆனால் தேமுதிக கட்சியும், புதிய தமிழகம் கட்சியும் இதுவரை தங்களது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அப்படி சூழ்நிலையில், அக்கட்சியை சேர்ந்தவர்கள் இந்த விருந்தில் பங்கேற்றது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

எல்.கே.சுதீஷ் – நயினார் நாகேந்திரன் பேச்சு:

குறிப்பாக, இந்தக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷும் ஒன்றாக நின்று பேசுவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஏனெனில், தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்க உள்ளது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு, அவர்கள் இருவரும் கூட்டணி குறித்து தான் பேசியதாகவும் கூறப்பட்டது. சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அதேபோல், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியுடனும் அதிமுக, பாஜக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மேலும் படிக்க: சென்னையில் இடைவிடாது கொட்டும் மழை.. இன்று எங்கெல்லாம் மழை இருக்கும்? வானிலை ரிப்போர்ட்..

நயினார் நாகேந்திரன் கொடுத்த விளக்கம்:

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம், எல்.கே.சுதீஷூடனான பேச்சுவார்த்தை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், தேநீர் விருந்துக்கு வந்த ஜி.கே. வாசன், ஜெயக்குமார் ஆகியோருடன் நான் தனித்தனியாகப் பேசினேன். எல்.கே. சுதீஷ் என் கல்லூரி நண்பர். அந்த அடிப்படையில் அவருடன் பேசியிருந்தேன். மற்றபடி இந்தச் சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை” எனத் தெரிவித்தார்.

இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
சட்டப்படி வீட்டில் எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம்?
இந்தியாவில் சர்க்கரை நோயால் உடல்நலம் மட்டுமல்ல பொருளாதார பாதிப்பு
விருது விழாவில் கவனம் ஈர்த்த ஷாருக்கானின் ரூ.13 கோடி ரோலெக்ஸ் வாட்ச் - அப்படி என்ன ஸ்பெஷல்?