விபத்தில் சிக்கிய பாஜக எம்.பி கார்.. ஹேமமாலினிக்கு என்னாச்சு? கோவையில் பரபர!
BJP MP Hema malini Car Accident : கரூர் சம்பவத்தை ஆராய பாஜக சார்பில் எம்.பி ஹேமமாலின் தலைமையில் 8 பேர் கொண்ட குழு சென்ற கார் கோவை அருகே விபத்தில் சிக்கியது. ஹேமமாலினி காருக்கு பின்னால் வந்த மற்றொரு பாஜக நிர்வாகியின் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.

ஹேமமாலினி சென்ற கார் விபத்து
கோவை, செப்டம்பர் 30 : கரூர் சம்பவத்தை ஆராய பாஜக சார்பில் எம்.பி ஹேமமாலின் தலைமையில் 8 பேர் கொண்ட குழ சென்ற கார் கோவை அருகே விபத்தில் சிக்கியது. ஹேமமாலினி காருக்கு பின்னால் வந்த மற்றொரு பாஜக நிர்வாகியின் கார் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மேலும், அதே காரில் ஹேமமாலின் கரூர் புறப்பட்டு சென்றார். காரின் முன்பக்கத்தில் மட்டும் சேதம் ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 2025 செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இது சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது.
இது தொடர்பாக கரூர் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை பாஜகவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் எல்.முருகன், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இது தொடர்பகா தமிழக அரசு சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. மேலும், பாஜக சார்பில் கரூர் சம்பவத்தை விசாரிக்க குழு அமைத்து ஜெ.பி.நட்டா உத்தரவிட்டிருந்தார்.
Also Read : கரூர் சம்பவத்தில் பொய் செய்தி.. யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு அதிரடி கைது!
விபத்தில் சிக்கிய பாஜக எம்.பி ஹேமமாலின் கார்
அந்த குழுவில் பாஜக எம்.பி ஹேமமாலினி தலைமையில் அணுராக் தாகூர், தேஜஸ்வி சூர்யா, பிரஜ்லால், ஸ்ரீகாந்த் ஷிண்டே, ரேகா சர்மா, புத்த மகேஷ் குமார், அப்ரஜிதா சாரங்கி ஆகியோர் உள்ளனர். இந்த குழு கரூருக்கு நேரில் சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து கூட்ட நெரிசலுக்கான காரணத்தை கண்டறிந்து பாஜக மேலிடத்திடம் அறிக்கை சமர்ப்பிக்கும். இந்த நிலையில் தான், எம்.பி ஹேமமாலினி தலைமையிலான குழு 2025 செப்டம்பர் 30ஆம் தேதியான இன்று கோவைக்கு வந்தடைந்தார்.
Also Read : கலவரத்தை தூண்டும் விதமாக ஆதவ் அர்ஜுனா பதிவு.. சில நிமிடங்களில் டெலிட்.. கொதித்தெழுந்த திமுக!
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து விட்டு, அவர்கள் சாலை மார்க்கமாக கரூருக்கு புறப்பட்டனர். கோவையில் இருந்து கரூரூக்கு அவர்கள் சென்றுக் கொண்டிருந்தபோது, சின்னியம்பாளையம் அருகே ஆர்.ஜி.புதூர் கார் விபத்தில் சிக்கியது. ஹேமமாலினி சென்றுக் கொண்டிருந்த காரின் பின்பக்கம் வந்துக் கொண்டிருந்த, பாஜக நிர்வாகியின் மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த காரின் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால், அவர்கள் அந்த காரிலேயே கரூருக்கு சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.