ஆந்திராவுக்கு சென்ற தென் கொரிய நிறுவனம்.. விலாசிய நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி..

South Korea Investments: தென் கொரிய நிறுவனமான ஹ்வாசங், தனது முதலீட்டை ஆந்திரா மாநிலத்திற்கு திருப்பியுள்ளது. தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள் ஆந்திரா மாநிலம் நோக்கி சென்றதை தொடர்ந்து, தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

ஆந்திராவுக்கு சென்ற தென் கொரிய நிறுவனம்.. விலாசிய நயினார் நாகேந்திரன், எடப்பாடி பழனிசாமி..

கோப்பு புகைப்படம்

Published: 

16 Nov 2025 20:26 PM

 IST

நவம்பர் 16, 2025: தமிழகத்தில் 1,720 கோடி ரூபாய் முதலீட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலை அமைக்க மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த தென் கொரிய நிறுவனமான ஹ்வாசங், தனது முதலீட்டை ஆந்திரா மாநிலத்திற்கு திருப்பியுள்ளது. இந்த முதலீட்டிற்கு ஆந்திரா மாநில அரசு தரப்பில் ஒரு ஏக்கர் நிலத்தை 99 காசு என்ற விலைக்கு வழங்க முன்வந்ததே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. தமிழகத்திற்கு வர வேண்டிய முதலீடுகள் ஆந்திரா நோக்கி சென்றதை தொடர்ந்து, தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இதேபோல், தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமியும் இதற்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

20,000 நேரடி வேலைவாய்ப்புகள் இன்று பறிபோயுள்ளன – நயினார் நாகேந்திரன்:


இது தொடர்பான பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் அவர், “”தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்” என்று வீண் பேச்சு பேசும் முதல்வர் அவர்களே, உங்கள் விடியா அரசாங்கத்தின் விளைவாகத் தான் தமிழக இளைஞர்களுக்குக் கிடைக்க வேண்டிய 20,000 நேரடி வேலைவாய்ப்புகள் இன்று பறிபோயுள்ளன.

மேலும் படிக்க: சென்னையில் இன்று முதல் புதிய பேருந்து வழித்தடம் தொடக்கம் – எங்கிருந்து எங்கே?

“புலி வருது, புலி வருது” என்பது போல ஒவ்வொரு முறையும் தாங்கள் முதலீடு வருகிறது என்று விளம்பரம் வெளியிடுவதும், பின் அந்த முதலீடு அண்டை மாநிலத்திற்குச் சென்றுவிட்டதாய் செய்தி வருவதும் தொடர் கதையாகி வருகிறது!” என குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி விமர்சனம்:


இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில், “ கொரிய நாட்டைச் சேர்ந்த ஹ்வாசங் நிறுவனம், தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவுள்ளதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது தமிழகத்தை விட்டு, ஆந்திர மாநிலத்தில் தொழில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும் படிக்க: முட்டை விலை இதுவரை காணாத புதிய உச்சம் – 50 ஆண்டுகால வரலாற்றில் இதுவே அதிகம் – காரணம் என்ன?

பொம்மை முதல்வர் , நான்கு ஆண்டுகளாக வெளிநாட்டு சுற்றுலா, உள்ளூரில் முதலீட்டாளர் மாநாடுகள் என “ஷோ” காட்டியதால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? வருவதாக சொன்ன நிறுவனங்களே Back Off செய்யும் நிலையில் தான் ஸ்டாலினின் ஆட்சி இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.