தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது.. அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
Minister M Subramanian On Bird Flu | சென்னையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உள்ள நிலையில், பொதுமக்கள் கடும் அச்சத்தில் இருந்தனர். இந்த நிலையில், சென்னையில் பறவைக் காய்ச்சல் கட்டுக்குள் உள்ளதாகவும், இருப்பினும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

கோப்பு புகைப்படம்
சென்னை, பிப்ரவரி 10 : சென்னையில் பறவைக் காய்ச்சல் (Bird Flu) பாதிப்பு உள்ள நிலையில், அது தொடர்பாக சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், முட்டையை ஹாப் பாயிலாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என கூறியுள்ளார். இந்த நிலையில், பறவைக் காட்ச்சல் தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஹாப் பாயில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது – மா.சுப்பிரமணியன்
சென்னையில் பறவைக் காய்ச்சல் குறித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், முட்டையை ஹாப் பாயிலாக சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என தெரிவித்துள்ளார். இறைச்சியை நன்கு வேக வைத்து சாப்பிடுவது அவசியமாக மாறி உள்ளது. பறவைகளோ, காகங்களோ திடீரென இறந்து கிடந்தால் அதனை கண்டவர்கள் இறந்த பறவையை ஆழமாக தோண்டி புதைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : கரூர் கொடூர சம்பவம்…2 காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை!
தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது – மா.சுப்பிரமணியன்
கோழி திடீரென உயிரிழந்தால் அதனை சமைத்து சாப்பிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பறவை காய்ச்சல் பதிப்பு கட்டுக்குள் உள்ளது. மக்களுக்கு பறவை காய்ச்சல் பரவவில்லை. எனினும் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதற்காக மேற்கண்டவை அறிவுறுத்தப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : சென்னையில் ரூ.70.37 கோடியில் புதிய நடைபாதைகள்…6 மண்டலங்களில் அமைக்கப்படுகிறது..எங்கெல்லாம் தெரியுமா!
சென்னையில் பறவைக் காய்ச்சல் தொற்று பரவலாக உள்ளதாக பொதுமக்கள் அச்சத்தில் இருந்த நிலையில், சென்னையில் பறவைக் காய்ச்சல் கட்டுக்குள் உள்ளதாகவும், இருப்பினும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.