திமுகவில் இணைந்த ஓபிஎஸ்.. மானங்கெட்டு திரிய வாழ்த்துகள் – காட்டமான பதிவை வெளியிட்ட அதிமுக ஐடி விங்..
கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ. பன்னீர்செல்வம், “திமுக கூட்டணி வலுவாக உள்ளது. வரக்கூடிய தேர்தலிலும் திமுக வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் மீண்டும் முதலமைச்சராக வருவார்” என குறிப்பிட்டிருந்தார். அதேபோல், “அதிமுக பிரிந்து கிடக்கும் நிலையில் எப்படி வெற்றி பெறும்?” எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.

கோப்பு புகைப்படம்
சென்னை, பிப்ரவரி 27, 2026: தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ளார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், இந்த திடீர் அரசியல் முடிவு பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. ஓ. பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, அதிமுக ஐடி விங் காட்டமான ஒரு பதிவை வெளியிட்டுள்ளது. அதில், “உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்து, வளர்ந்த இயக்கத்தின் வாயிற்கதவை எட்டி உதைத்தீர்கள்! பாவம் சும்மா விடுமா?” என பதிவிட்டுள்ளனர்.
தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள இந்த நிலையில், இன்றைய தினம் ஒரு முக்கிய அரசியல் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, அதிமுகவில் பல ஆண்டுகளாக விசுவாசியாக இருந்த ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்துள்ளார்.
மேலும் படிக்க: அழிவுப்பாதையில் அதிமுக.. “திமுகவில் பெரு மகிழ்ச்சியோட தொண்டனாக இணைந்துள்ளேன்”.. ஓபிஎஸ் பேட்டி
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்:
ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கட்சியிலிருந்து நீக்கினார். அதனைத் தொடர்ந்து பலமுறை ஓபிஎஸ் அதிமுகவில் இணைய முயன்றபோதும், எடப்பாடி பழனிசாமி அதற்கு இடமளிக்கவில்லை. சமீபத்தில் “தொண்டர்கள் உரிமை மீட்பு குழு” ஒன்றையும் அமைத்திருந்தார். ஆனால் அதற்கும் எடப்பாடி பழனிசாமி செவிசாய்க்கவில்லை.
இதன் காரணமாக, கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் திமுகவில் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார்.
மேலும் படிக்க: திமுகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.. இணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படுமா?
திமுகவில் இணைந்த ஓபிஎஸ்:
கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓ. பன்னீர்செல்வம், “திமுக கூட்டணி வலுவாக உள்ளது. வரக்கூடிய தேர்தலிலும் திமுக வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் மீண்டும் முதலமைச்சராக வருவார்” என குறிப்பிட்டிருந்தார். அதேபோல், “அதிமுக பிரிந்து கிடக்கும் நிலையில் எப்படி வெற்றி பெறும்?” எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
மானங்கெட்டு திரிய வாழ்த்துகள் – அதிமுக:
கூச்சமே இல்லையா @OfficeOfOPS…??!!
“ரோஸி டீக்கடை” நடத்திட்டு இருந்த உங்களை,
ஆளாக்கி,
அமைச்சராக்கி,
ஏன் முதலமைச்சராகவே ஆக்கியது இந்த இயக்கம்.அம்மா வளர்த்த இயக்கத்திற்கு
A-Form, B-Form கையெழுத்து போடும்
பெருமையைக் கொடுத்து
அழகு பார்த்தார்கள் அண்ணா திமுக தொண்டர்கள்.ஆனால்… pic.twitter.com/CadCmkMg9A
— AIADMK IT WING – SayYesToWomenSafety&AIADMK (@AIADMKITWINGOFL) February 27, 2026
இந்த சூழலில், பிப்ரவரி 27, 2026 அன்று காலை 10 மணி அளவில் அவர் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தார். இதற்கு எதிர்வினையாக, அதிமுக ஐடி விங் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“உண்ட வீட்டுக்கே இரண்டகம் செய்வது போல்,
வளர்த்த இயக்கத்தின் வாயிற்கதவை எட்டி உதைத்தீர்கள்!
பாவம் சும்மா விடுமா?
அரசியல் அனாதையாக,
இனி நீங்கள் அஇஅதிமுக வேட்டியைக் கூட கட்ட முடியாத நிலைக்கு தள்ளினர்
இரத்தத்தின் இரத்தமான தொண்டர்கள்!
பசுத்தோல் போர்த்திக் கொண்டு
நீங்கள் நடத்திய நாடகமெல்லாம்
அம்பலப்பட்டு நின்றதும்,
வேறு வழியில்லை என்றதும்,
ஓனர் வாசற்படிக்கே போயாச்சோ?
இனி உம்மைப் போன்ற பச்சோந்திக்கு
‘அம்மா’ எல்லாம் சும்மாதானே?!
“உதயநிதி வாழ்க, இன்பநிதி வாழ்க” என
வெட்கமே இல்லாமல், மானங்கெட்டு திரிய வாழ்த்துகள்!”