11 விரைவு ரயில் சேவையில் மாற்றம்.. தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் – தெற்கு ரயில்வே அறிவிப்பு..

தற்போது நடைபெறும் புனரமைப்பு பணிகளின் காரணமாக, ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் 11 விரைவு ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது ரயில் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

11 விரைவு ரயில் சேவையில் மாற்றம்.. தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் - தெற்கு ரயில்வே அறிவிப்பு..

கோப்பு புகைப்படம்

Published: 

20 Mar 2026 16:00 PM

 IST

சென்னை, மார்ச் 20, 2026: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணிகள் காரணமாக, 11 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஏப்ரல் 5, 2026 அன்று இயக்கப்படும் ராமேஸ்வரம்–சென்னை எழும்பூர் சேது சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ், கொல்லம்–சென்னை எழும்பூர் அனந்தபுரி விரைவு ரயில் ஆகியவை தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவைகளில் மாற்றம்:

அதேபோல், ஏப்ரல் 6, 2026 அன்று இயக்கப்படும் நெல்லை–சென்னை எழும்பூர் நெல்லை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர்–ராமேஸ்வரம் சேது எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர்–செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர்–கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர்–தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்கள் வழக்கமாக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த ரயில்கள் தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சேலத்தில் கோர விபத்து.. கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து மோதி 5 பேர் பலி..

இதற்கிடையில், ஏப்ரல் 6, 2026 அன்று சென்னை எழும்பூர்–திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எழும்பூர் ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகள்:

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தொடர்ந்து புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால், ஏற்கனவே மின்சார ரயில் சேவைகளிலும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

அதே நேரத்தில், அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பணிகளின் காரணமாக, சென்னை எழும்பூரிலிருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் சில விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: நடத்தையில் சந்தேகம்: கணவன் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்ற மனைவி

இந்த நிலையில், தற்போது நடைபெறும் புனரமைப்பு பணிகளின் காரணமாக, ஏப்ரல் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் 11 விரைவு ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது ரயில் பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Follow Us
Related Stories
இன்க்யூபேட்டரில் ஏற்பட்ட மின்கசிவு.. பிறந்த 6 நாள் பச்சிளம் குழந்தைக்கு ஏற்பட்ட கொடூரம்.. மருத்துவமனையின் அலட்சியம் தான் காரணமா?
ராமதாஸுடன் சசிகலா மீண்டும் சந்திப்பு… கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு?
S.P. Velumani Tamil Nadu Election: தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றிக் கொடி நாட்டுவாரா எஸ்.பி.வேலுமணி!
P. Dhanapal Tamil Nadu Election: சபாநாயகர் பதவியில் தடம் பதித்தவர்.. 7 முறை தொடர் வெற்றியாளர்.. அவினாசி தொகுதியை தக்க வைத்துக் கொள்வாரா தனபால்!
சென்னை கிண்டி சிறுவர் பூங்கா மூடல்.. 20க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழந்ததால் அதிர்ச்சி..
என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணியில் உடன்பாடு.. தொகுதிகள் பங்கீடு.. எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு!
வங்கி லாக்கரில் வைக்கப்படும் நகைகளுக்கு பாதுகாப்பு இல்லையா? உண்மை என்ன?
ஹார்முஸ் கடல் பகுதியில் சிக்கிய இந்திய கேப்டன் பயணித்த கப்பல் - குடும்பத்தினர் கவலை
போர் பதற்றம் - வெறிச்சோடி காணப்படும் துபாய் நகரங்கள்
இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு என்பது உண்மையா? மத்திய அரசு விளக்கம்