மாமனார், மாமியாருடன் சண்டை.. கைக்குழந்தையுடன் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு!! இன்ஸ்டாவில் கடைசி வீடியோ!
காவியாவிடம் மாமியார் செந்தமிழ்செல்வி, மாமனார் பழனிச்சந்திரன் ஆகிய இருவரும் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு எதனால், அடிக்கடி சண்டை வந்தது என்ற விவகாரம் சரியாக தெரியவில்லை. குறிப்பாக வரதட்சனை கேட்டு இந்த தகராறு நடந்ததா என்பதும் தெரியவில்லை. இதனால், தயார் வீட்டில் அவர் வசித்து வந்தார்.

குழந்தையுடன் இளம்பெண் விபரீதம்
நாகை, பிப்ரவரி 06: நாகை மாவட்டத்தில் காதல் திருமணம் செய்து பெண், கைக்குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அப்பெண் தற்கொலை செய்வதற்கு முன்பு, தனது சாவுக்கு மாமனார்-மாமியார் தான் காரணம் என வீடியோ வெளியிட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேட்டை அடுத்த ஆயக்காரன்புலம் கிராமத்தை சேர்ந்தவர் சிவபாலன் (33). இவர், நடமாடும் கால்நடை மருத்துவமனை வாகன தற்காலிக ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.
காதலித்து திருமணம் செய்த காவியா:
இவருடைய மனைவி காவியா (20). ஓரே சமூகத்தை சேர்ந்த சிவபாலனும், காவியாவும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 6 மாத குழந்தை இருந்தது. காவியா தனது கணவர் மற்றும் மாமனார், மாமியாருடன் வசித்து வந்தார். சிவபாலனின் தாயார் செந்தமிழ்செல்வி (52), தகட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தந்தை பழனித்துரை (62), ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர்.
மாமனார், மாமியார் இடையே சண்டை:
இந்நிலையில், காவியாவிடம் மாமியார் செந்தமிழ்செல்வி, மாமனார் பழனிச்சந்திரன் ஆகிய இருவரும் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவர்களுக்கு எதனால், அடிக்கடி சண்டை வந்தது என்ற விவகாரம் சரியாக தெரியவில்லை. குறிப்பாக வரதட்சனை கேட்டு இந்த தகராறு நடந்ததா என்பதும் தெரியவில்லை. இதனிடையே, அடிக்கடி சண்டை வந்ததால் சிவபாலன், தனது மனைவி காவியாவை அருகில் உள்ள அவரது தாயார் வீட்டில் சென்று விட்டுள்ளார்.
குழந்தையுடன் தற்கொலை:
மாமனார், மாமியார் இடையே ஏற்பட்ட சண்டையால் மன நிம்மதி இழந்த காவியா, வாழ்க்கை மீதே விரக்தி நிலைக்கு வந்ததாக தெரிகிறது. இதனால், தாயார் வீட்டில் வசித்து வந்த காவியா, நேற்று முன்தினம் இரவு தனது 6 மாத குழந்தையை துப்பட்டாவால் உடலில் கட்டிக்கொண்டு அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். குழந்தையுடன் காவியாவை நீண்ட நேரம் காணாததால் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர். அப்போது கிணற்றில் குழந்தையுடன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இன்ஸ்டாகிராமில் வீடியோ:
இதைத்தொடர்ந்து, சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் விரைந்து வந்த போலீசார் கிணற்றில் இருந்து காவியா மற்றும் குழந்தையின் உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, உடல்களும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே, தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக காவியா தனது இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் தனது சாவுக்கு மாமியார் செந்தமிழ்செல்வி மற்றும் மாமனார் பழனித்துரை ஆகியோர் தான் காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். மேலும், தனது கணவர் நல்லவர் என்றும் அவர், தனது சாவிற்கு காரணம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மாமியார் கைது, தலைமறைவான மாமனார்:
இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார், மாமியார் செந்தமிழ்ச்செல்வியை கைது செய்தனர். இதனிடையே, கைது நடவடிக்கைக்கு பயந்த மாமனார் பழனிதுரை தலைமறைவாகியுள்ளார். தொடர்ந்து, அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
(தற்கொலை எதற்கும் தீர்வல்ல.. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசலாம். மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -24640050)