அரையாண்டு விடுமுறை….. பள்ளிகளுக்கு அன்பில் மகேஷ் எச்சரிக்கை – விவரம் இதோ

Half Yearly Leave: செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரையாண்டு விடுமுறைகளின் போது சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று கடுமையாக எச்சரித்தார். மேலும், அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு மீண்டும் கல்விச் சுமை ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

அரையாண்டு விடுமுறை..... பள்ளிகளுக்கு அன்பில் மகேஷ் எச்சரிக்கை - விவரம் இதோ

அன்பில் மகேஷ்

Updated On: 

23 Dec 2025 19:03 PM

 IST

சென்னை, டிசம்பர் 23 : தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் (Christmas) மற்றும் புத்தாண்டை முன்னிட்டு 10 நாட்கள் அரையாண்டு தேர்வு விடுமுறைவிடப்படுவது வழக்கம். பள்ளிகளுக்கான அரையாண்டு விடுமுறைகள் தொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  (Anbil Mahesh) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரையாண்டுத் தேர்வுகளுக்குப் பிறகு பள்ளிகளுக்கு வரும் டிசம்பர் 24, 2025 அன்று முதல் விடுமுறை தொடங்க உள்ள நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறைகள் முடிவடைந்த பின், ஜனவரி 5, 2025 அன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்பில் மகேஷ் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

இந்த நிலையில், திருச்சியில் டிசம்பர் 23, 2025 அன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அரையாண்டு விடுமுறைகளின் போது சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று கடுமையாக எச்சரித்தார். விடுமுறை என்பது மாணவர்கள் மனஅழுத்தத்திலிருந்து விடுபட்டு புத்துணர்ச்சி பெறுவதற்காக வழங்கப்படுவதாகவும், அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு மீண்டும் கல்விச் சுமை ஏற்படுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, தனியார் பள்ளிகள் இந்த அறிவுறுத்தலை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிக்க : அரையாண்டு விடுமுறை.. ஜன. 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் – பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு..

மேலும், தமிழக அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். இதுவரை 9,416 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்றும், அடுத்த கட்டமாக மேலும் 7,898 வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். பழுதடைந்த பள்ளி கட்டடங்களை இடித்து அகற்ற வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும், புதிய கட்டடங்கள் கட்டப்படும் காலகட்டத்தில், மாணவர்கள் சமூகக் கூடங்கள் அல்லது வாடகை கட்டடங்களில் அமர வைத்து வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

அரசு ஊழியர்கள் போராட்டம் குறித்து அன்பில் மகேஷ் விளக்கம்

அதேபோல், அரசு ஊழியர்கள் தொடர்பான விவகாரத்திலும் அமைச்சர் கருத்து தெரிவித்தார். ஜாக்டோ-ஜியோ அமைப்புடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளதாகவும், இருப்பினும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாகவும் கூறினார். இந்த விவகாரத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6ஆம் தேதிக்குள் நல்ல செய்தி அளிப்பார் என்ற நம்பிக்கையையும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

இதையும் படிக்க : புத்தாண்டு கொண்டாட்டம்.. குழந்தைகளுக்கு நோ எண்ட்ரி.. மீறினால் நடவடிக்கை – உயர்நீதிமன்றம் உத்தரவு..

மாணவர்களின் நலன், கல்வி சூழல் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாகவும், தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். அரையாண்டு விடுமுறையில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சில தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related Stories
அதிமுகவை படுபாதாளத்தில் தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி, அவருக்கு சரியான பாடம் புகட்டுவோம்… – ஓ.பன்னீர் செல்வம் விமர்சனம்
ஹேப்பி நியூஸ்! பொங்கலை முன்னிட்டு இலவ வேட்டி சேலை எப்போது? அமைச்சர் மகிழ்ச்சியான தகவல்
வைகுண்ட ஏகாதசி…. திருச்சி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – வெளியான தகவல்
தவெக அலுவலகம் முன்பு அஜிதா உண்ணாவிரதம் – பின் வாசல் வழியாக வெளியேறிய ஆனந்த் – பரபரப்பு சம்பவம்
விஜய் ஒரு ஸ்பாயிலர் என சொன்ன பியூஷ் கோயல்? – எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பு குறித்து வெளியானத தகவல்
விஜய் கார் மறிப்பு… தனக்கு பதவி வழங்கவில்லை என ஆர்ப்பாட்டம் – பரபரப்பான பனையூர்
2026ல் இந்த ஆபத்துகள் பூமியில் ஏற்படலாம்.. அதிர்ச்சி தரும் பாபா வங்காவின் கணிப்புகள்..
புர்ஜ் கலீஃபாவை தாக்கிய மின்னல்.. அதிர்ச்சி வீடியோவைப் பகிர்ந்த துபாய் இளவரசர்!!
ஒரு வாழைப்பழம் இயற்கையாக பழுக்க எவ்வளவு நாட்கள் ஆகும்? - நடிகை சமீரா ரெட்டி பகிர்ந்த வீடியோ
தேர்வர்களுக்கான குட்நியூஸ்.. RRB 2026 தேர்வு காலண்டர் வெளியீடு!