NDA கூட்டணியில் ஒட்டாத அதிமுக – அமமுக உறவு?.. பகையை மறக்காத தலைவர்கள்? ஆதங்கத்தில் நிர்வாகிகள்..

இந்த கூட்டத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, "மறைந்த முதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளைத் தொடரவும், மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றவும் கைகோர்த்துள்ளோம்" என்றும், குடும்பச் சண்டையில் சமரசம் செய்துகொள்வது பலவீனம் அல்ல எனவும் அவர்கள் கூட்டாகத் தெரிவித்தனர்.

NDA கூட்டணியில் ஒட்டாத அதிமுக - அமமுக உறவு?.. பகையை மறக்காத தலைவர்கள்? ஆதங்கத்தில் நிர்வாகிகள்..

எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன்

Updated On: 

28 Feb 2026 12:52 PM

 IST

சென்னை, பிப்ரவரி 28: அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக இணைந்தாலும், பழைய பகையை இன்னும் அமமுகவினர் மறக்கவில்லை என்றும், கட்சி நிகழ்ச்சிகளை புறக்கப்பதாகவும் அதிமுக நிர்வாகிகள் குமுறுகின்றனர். கடந்த ஜனவரி 21, 2026 அன்று, டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (AMMK), எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அதிகாரப்பூர்வமாக இணைந்தது. 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு கூட்டணியிலிருந்து விலகியிருந்த தினகரன், தற்போது “திமுகவை வீழ்த்துவதே இலக்கு” எனக் கூறி மீண்டும் இணைந்துள்ளார். இதன் தொடர்ச்சியாக மதுராந்தகத்தில் நடைபெற்ற என்.டி.ஏ. கூட்டணிப் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியும், டிடிவி தினகரனும் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரே மேடையில் தோன்றினர்.

மேலும் படிக்க: தமிழகத்தை உலுக்கிய மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு… மார்ச் 7- இல் வெளியாகிறது தீர்ப்பு!

பகையை மறக்காத தலைவர்கள்:

இந்த கூட்டத்திற்குப் பிறகு இருவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, “மறைந்த முதல்வர் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளைத் தொடரவும், மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்றவும் கைகோர்த்துள்ளோம்” என்றும், குடும்பச் சண்டையில் சமரசம் செய்துகொள்வது பலவீனம் அல்ல எனவும் அவர்கள் கூட்டாகத் தெரிவித்தனர். முன்னதாக “எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்க மாட்டோம்” என்று கூறிவந்த தினகரன், தற்போது கூட்டணியின் நலன் கருதி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு ஒன்றாக தோன்றினர். குறிப்பாக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடனான பகையை மறந்து பங்காளி ஆகி விட்டோம் என டிடிவி தினகரன் கூறியிருந்தார்.

இபிஎஸ்- டிடிவி ஒன்றாக இணையவில்லை:

இந்த இணைப்பு நடந்து ஒரு மாதம் ஆகி விட்டது. எனினும், அதன் பின் இருவரும் இணைந்து எந்தவொரு அரசியல் நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. அதோடு, தொகுதி பங்கீடு குறித்து தாங்கள் பாஜகவிடம் தான் பேசுவோம் என டிடிவி தினகரன் திட்டவட்டமாக தெரிவித்தார். அதாவது, தங்களுக்கு பாஜகவே தொகுதிகளை ஒதுக்க உள்ளதாகவும் கூறினார். இது இரு கட்சியினர் இடையே, சமூக உறவு இல்லாத நிலையை காட்டுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதிமுகவினர் கூறும்போது, டிடிவி தினகரன், சில நிர்பந்தங்களுக்கு உட்பட்டு, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து விட்டார். ஆனால், கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என கூற மறுக்கிறார்.

அதிமுக அழைத்தும் புறக்கணிக்கும் அமமுகவினர்:

அதோடு, தங்கள் கட்சிக்கு, கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக தொகுதிகளை ஒதுக்கும் என்ற ரீதியில் பேசுகிறார். அமமுகவினர், அதிமுகவோடு உள்ள பழைய பகையை மறக்கவில்லை. அதனால் தான், பழனிசாமி கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு அழைத்தும் அமமுகவினர் புறக்கணிக்கின்றனர். இதனால், இரு கட்சியினரும் தேர்தல் பணியில் இணைந்து செயல்படுவரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க: முடிவுக்கு வரும் தந்தை மகன் மோதல்? ராமதாஸ் தலைமையில் இன்று நடக்கும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..

ஒத்துழைப்பு தராத டிடிவி தினகரன்:

அதுமட்டுமல்ல, பீகார் தேர்தலின்போது, தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் இடையே ஒற்றுமை ஏற்படுத்த, கூட்டணி கட்சி தலைவர்களின் வீடுகளில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. அதேபோன்று, தமிழகத்திலும், எடப்பாடி பழனிசாமி – டிடிவி தினகரன் வீடுகளில் விருந்து நிகழ்ச்சிக்கு, பாஜக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதற்கு தினகரன் ஒப்புக்கொள்ளாததால், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Follow Us
குதிரை மேல் வந்து டெலிவரி செய்த ப்ளிங்கிட் ஏஜெண்ட்.. இணையத்தில் வைரல் காட்சிகள்..
நான்கு நாட்களுக்கு பிறகு குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
11 மாத குழந்தையின் உயிரைக் காப்பாற்ற ஒன்றிணைந்த மக்கள்
செயல்படாத EPF கணக்குகள்.. தொழிலாளர் அமைச்சகம் முக்கிய முடிவு..