கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்த 5 சிறுவர்கள்.. ஒரு லட்சம் ஊக்கத்தொகை வழங்கிய நயினார் பாலாஜி..
தமிழகத்தின் இளம் சாதனையாளர்கள் சிறுவர்கள் உட்பட 10 பேர் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ்பெண் முத்தமிழ்செல்வி தலைமையில் ஆப்ரிக்கா கண்டத்தின் மிக உயரமான கிளிமஞ்சாரோ உஹுரு சிகரம் (5,895 மீ) ஏறி வெற்றிகரமாக சாதனை படைத்து உள்ளனர்.

கோப்பு புகைப்படம்
சென்னை, நவம்பர் 10, 2025: வரலாற்றில் முதன்முறையாக ஐந்து சிறுவர்கள் உட்பட 10 பேர் பெற்றோருடன் சேர்ந்து கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில அமைப்பாளர் நயினார் பாலாஜி ரூ.1 லட்சம் பரிசு வழங்கினார். தமிழகத்தின் இளம் சாதனையாளர்கள் சிறுவர்கள் உட்பட 10 பேர் எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ்பெண் முத்தமிழ்செல்வி தலைமையில் ஆப்ரிக்கா கண்டத்தின் மிக உயரமான கிளிமஞ்சாரோ உஹுரு சிகரம் (5,895 மீ) ஏறி வெற்றிகரமாக சாதனை படைத்தனர்.
கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்த சிறுவர்கள்:
இதில் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிவவிஷ்ணு (5), காங்கயத்தைச் சேர்ந்த பாரி (7) மற்றும் இன்பா (10), கோவைச் சேர்ந்த மனு சக்ரவர்த்தி (12), சென்னையைச் சேர்ந்த மகேஸ்வரி (25) மற்றும் கடலூரைச் சேர்ந்த சக்திவேல்(32) ஆகியோர் இணைந்து கிளிமாஞ்சாரோ சிகரத்தின் உச்சியை அடைந்து சாதனை படைத்தனர். மேலும் தாம்பரத்தை சேர்ந்த ரோஷன் சிம்ஹா (13) தனது தந்தை பாபுவுடன் 4, 720 மீட்டர் உயரம் வரை சென்றடைந்தார்.
உலகத்திலேயே ஐந்து வயதில் கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி மூன்றாவது சாதனையாளர் என்ற இடத்தை பிடித்தார் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவவிஷ்ணு. மேலும் வரலாற்றில் முதன்முறையாக தமிழர்கள் ஐந்து சிறுவர்கள் உட்பட 10 பேர் பெற்றோர்களுடன் சேர்ந்து கிளிமாஞ்சாரோ சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளனர்.
ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை:
உலகிலேயே அதி உயரமான ஆப்பிரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள கிளிமாஞ்சாரோ உயிர் சிகரத்தை 4,720 மீட்டர் ஏறி தன் கையில் தமிழ் கடவுளான முருகர் சிலையை எடுத்துச் சென்றனர். தமிழகத்திற்கும் இந்து மதத்திற்கும் பெருமை சேர்த்த சிறுவர்களுக்கு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் சார்பாக 1 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதனை பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில அமைப்பாளர் நயினார் பாலாஜி சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வைத்து வழங்கினார்.