பெற்றோர் உஷார்.. பால் குடிக்கும்போது மூச்சுத்திணறல்.. பறிபோன பிஞ்சு உயிர்!
Chennai Infant Dies : சென்னையில் பால் குடிக்கும்போது பிறந்து 46 நாட்களே ஆன குழந்தை உயிரிழந்துள்ளது. பால் குடிக்கும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு, பச்சிளம் குழந்தை உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மாதிரிப்படம்
சென்னை, செப்டம்பர் 27 : சென்னையில் பால் குடிக்கும்போது, ஒன்றரை மாத குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது. பிறந்து 46 நாட்களே ஆன நிலையில், குழந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிறக்கும் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்வது அவசியம். நாம் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் சில மோசமான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் குழந்தைகளை கவனமாக கவனிக்க வேண்டும். இந்த நிலையில், தான் சென்னையில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்துள்ளது. அதாவது, பால் குடிக்கும்போது, ஒன்றரை மாத குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளது. சென்னை அடுத்த பூந்தமல்லி வெள்ளவேடு பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா (26). இவர் தனியார் தொழில்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி சாருலதா (23). இந்த தம்பதிக்கு 46 நாட்களுக்கு முன்பு தான் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், குழந்தைக்கு வழக்கமாக இரவில் உணவு கொடுத்துள்ளார். அதாவது, இரவில் குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தூங்க வைத்துள்ளார். மறுநாள் காலை வரை குழந்தை அழாமல் அசையாமல் இருந்துள்ளது. இதனால், குழந்தை கையில் எடுத்து எழுப்பி உள்ளார். ஆனால், குழந்தையிடம் எந்த அசைவு இல்லாததால் அதிர்ச்சி அடைந்து, உடனே பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே குழந்தை உயிரிழந்ததாக கூறினர்.
Also Read : 9 மணி நேரம் தான் டிராவல்.. சென்னை டூ ராமேஸ்வரம் வந்தே பாரத் ரயில்.. எப்போது தெரியுமா?
பால் குடிக்கும்போது பச்சிளம் குழந்தை பலி
மேலும், பால் குடிக்கும்போது, குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்திருக்கலாம் என மருத்துவர்கள் கூறினர். இதனால், மருத்துவமனையிலேயே தம்பதி அழுது துடித்தனர். இதுகுறிதுது வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குழந்தையை உடல் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
Also Read : காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு.. திருப்பூரில் ஷாக்
பால் குடிக்கும்போது, குழந்தை மூச்சுத் திணறி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கூட, ஆந்திராவில் கொதிக்கும் பாலில் ஒன்றரை வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்துள்ளது. பள்ளியில் வேலை பார்க்கும் தாயுடன் வந்த குழந்தை, சமையலறைக்கு சென்றிருக்கிறது. அங்கு ஒரு பெரிய பாத்திரத்தில் கொதிக்க கொதிக்க பால் இருந்துள்ளது. அப்போது, பாத்திரத்திற்கு அருகில் வந்த குழந்தை, கால் இடறி கொதிக்கும் பால் பாத்திரத்தில் விழுந்துள்ளது. இதனை அடுத்து குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.