சென்னையில் 2024-ல் மட்டும் 20,000 நாய்க்கடி சம்பவங்கள்.. நீதிமன்றத்தில் மாநகராட்சி தகவல்!
20,000 Dog Cases in One Years | சென்னை மட்டுமன்றி இந்தியா முழுவதும் நாய்க்கடி சம்பவங்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.

கோப்பு புகைப்படம்
சென்னை, ஆகஸ்ட் 15 : சென்னையில் 2024 ஆம் ஆண்டு மட்டும் 20,000 பேரை நாய்கள் கடித்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. ராட்வீலர் நாய்களை முக கவசம் அணியாமல் வெளியே அழைத்துவர கூடாது என உத்தரவிட கோரி வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், நீதிபதிகள் எழுப்பிய கேள்விக்கு மாநகராட்சி கால்நடை தலைமை அதிகாரி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் தெரு நாய்கள் தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில், இந்த எண்ணிக்கை பிர்ச்னையை தீவிரப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
ராட்வீலர் நாய்கள் குறித்து பொதுநல மனுதாக்கல் செய்த வழக்கறிஞர்
ராட்வீலர் என்ற வெளிநாட்டு ரக நாய் மிகவும் ஆக்ரோஷமானது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இந்த வகை நாய்களுக்கு வாய்மூடி அணியாமல் அதன் உரிமையாளர்கள் நடைபயிற்சிக்கு அழைத்துவர கூடாது என உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் என்பவர் பொதுநல மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று (ஆகஸ்ட் 14, 2025) விசாரணைக்கு வந்தது.
இதையும் படிங்க : தொழிலாளி மூக்கை கடித்த ராட்வீலர் நாய்.. பூந்தமல்லி அருகே நடந்த பரபரப்பு சம்பவம்..
அப்போது சென்னை பெருநகர மாநகராட்சி கால்நடை தலைமை அதிகாரி கமால் உசேன் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சென்னை மாநகரத்திற்குள் செல்லப்பிராணிகளை வளர்ப்போர் அதற்கான உரிமத்தை பெற வேண்டும். இந்த உரிமத்தை ஆன்லைன் மூலம் பெறலாம். செல்லப்பிராணிகளின் புகைப்படங்கள் மற்றும் அதன் உரிமையாளரின் புகைப்படம், முகவரி ஆகியவற்றை பதிவேற்றம் செய்து ரூ.50 கட்டணம் செலுத்தி உரிமத்தை பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்.
2025-ல் மட்டும் சென்னையில் 20,000 நாய்க்கடி சம்பவங்கள் நடைபெற்றுள்ளன
தொடர்ந்து பேசிய அவர், இதுவரை சுமார் 11,630 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும், நாய்க்கடி இல்லாத சென்னை என்ற இலைக்கை அடைய ஆகஸ்ட் 09, 2025 முதல் தெருநாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறியிருந்தார். அப்போது சென்னையில் எத்தனை நாய்க்கடி சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், 2024 ஆம் ஆண்டில் மட்டும் 20,000 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன என்று விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க : வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவர்.. பறிபோன உயிர்.. பதறவைக்கும் வீடியோ!
அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த நீதிபதிகள், தெருநாய்களை பிடித்து கடுத்தடை செய்து, தடுப்பூசி போட்டு மீண்டும் அதே பகுதியில் விடுவதற்கு பதிலாக அவற்றை துன்புறுத்தாமல், தொந்தரவு செய்யாமல், இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணை மேற்கொண்டு வருவதால் நாய்க்கடி சம்பவங்களை தடுக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.