சாத்தனூர் அணையில் இறங்கிய இளைஞர்… சட்டென கடித்து விழுங்கிய முதலை.. உயிரிழந்த சோகம்!
Sathanur Dam Crocodile Attack : திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் முதலை கடித்து இளைஞர் உயிரிழந்துள்ளார். ஆடி மேய்க்க சென்றபோது, எதிர்பாரா நேரத்தில் இளைஞரை காலை கவிச் சென்று கடித்துள்ளது. இதில் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்ததுள்ளதாக தெரிகிறது.

திருவண்ணாமலை, செப்டம்பர் 15 : திருவண்ணாமலை அடுத்த சாத்தனூர் அணையில் முதலை கடித்து கல்லூரி மாணவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாத்தனூர் அணை அருகே ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, முதலை அவரை கடித்துள்ளது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். திருவண்ணாமலை அடுத்த சாத்துனூர் அணை அம்மாவட்ட மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட சாத்துனூர் அணையின் தண்ணீர் திருவண்ணாமலை மட்டுமின்றி, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்ட விவசாய மக்களுக்கு தேவையான தண்ணீரையும் வழங்கி வருகிறது. சாத்தனூர் அணையை காண தினமும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மக்கள் வருவார்கள். இங்கு முதலைகள் அதிகள அளவில் உள்ளன.
இந்த நிலையில் தான், 2025 செப்டம்பர் 14ஆம் தேதியான நேற்று சாத்தனூர் அணையில் இளைஞரை முதலை கடித்ததில் அவர் உயிரிழந்தார். சாத்தனூர் கிராமம், திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் (18). இவர் திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். வார விடுமுறை என்பதால், இவர் தனது நண்பர்களுடன் சாத்தனூர் அணையின் பின் பகுதியில் ஆடு மேய்ப்பதற்காக வந்ததாக கூறப்படுகிறது. ஆடு மேய்த்துக் கொண்டிருந்த இவர், தண்ணீர் தாகம் எடுக்கவே, தண்ணீர் குடிக்க நீர்பிடிப்பு பகுதியில் இறங்கியுள்ளார்.
Also Read : அதிகரிக்கும் தெரு நாய் தொல்லை.. சென்னையில் ரேபிஸ் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..




சாத்தனூர் அணையில் முதலை கடித்து இளைஞர் பலி
அப்போது, சற்றும் எதிர்பாராவிதமாக முனீஸ்வரனின் காலை முதலை ஒன்று கடித்து தண்ணீருக்குள் இழுத்து சென்றது. இதில் முனீஸ்வரனை முதலை கடித்தும், அவர் தண்ணீருக்குள் மூச்சுத்திணறியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் அலறி உள்ளனர். உடனே, இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தனூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் தண்ணீர் குடிக்கவும், முகம் கழுவ நீர் நிலையில் இறங்கியபோது, முதலை இழுத்து சென்றிருப்பதும், அதனால் தான் மூச்சு திணறி முனீஸ்வரன் உயிரிழந்தது என்பது தெரியவந்துள்ளது.
Also Read : உஷார்.. ஜிம்மில் கொடுத்த புரோட்டின் பவுடரால் அலர்ஜி.. பறிபோன இளைஞர் உயிர்!
சாத்தனூர் அணை நீர்பிடிப்பு பகுதியில் முதலை கடித்து இளைஞர் உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. பொதுவாகவே முதலைகள் மனிதர்களை தாக்குவதில்லை என சொல்லப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் எப்போதாவது நடக்கும். முதலைகள் பெரும்பாலும் நீர்நிலைகளுக்கு வரும் விலங்குகளை அடித்து சாப்பிடுவது தான் அதன் இயல்பாக உள்ளது. ஆனால், முதலைகளுக்கு இயல்பாகவே வேட்டை குணம் கொண்டவையாகும். எனவே, விலக்கு என நினைத்து முனீஸ்வரனை முதலை தாக்கி இருக்கலாம் என வனத்துறையினர் கூறுகின்றனர்.